Skip to main content

தமிழ் நாடகங்களில் மொழிநடை

                                                                             தமிழ் நாடகங்களில் மொழிநடை ஆய்வுச் சுருக்கம்           பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாடகங்கள் பெரும்பாலும் பாடலும் உரைநடையும் கலந்தே எழுதப்பெற்றுள்ளது . நாட்டார் நாடகங்கள் முதல் முதலில் தெருக்கூத்துக்கள் நடத்தப்பெற்றன . ஆகையினால் , அவை அவற்றிற்குத் தகுந்த முறையில் தாம் எழுதப்பெற்றன . பின்னர் அவை அரங்கத்தில் நடிக்கப் பெற்றன . மாற்றங்கள் அதிகமின்றிப் பாடல்களாகவே அவை அமைந்து இடையிடையே சிறிய சிறிய உரைநடைப் பகுதிக் காணப்பெறும் . மேலும் நாடகங்களில் மக்களின் வாய்மொழிகள்   வடமொழிக் கலப்பு மிக மிக அதிகமாகிக் கொண்டிருந்தது . அந்நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலம் அதிகம் கலந்து விட்டது . மேலும் பக்கத்து மாநில மொழிகளான தெலுங்கு போன்றவை...

என் எண்ணச் சிதறல்கள்! (3)

 

என் எண்ணச் சிதறல்கள்! (3)

 

          Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்  கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன். அந்தக் கவிதைகளை அனைத்தையும்  தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன்.

1.    தன் நம்பிக்கை!
சந்தேகம்!

மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்!
சஞ்சலம்!
செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்!

2.    வாசிப்பு!
அச்சுறுத்தும் வாழ்வின்
இருண்ட பக்கங்கள்
வாசிக்க வாசிக்க
வெளிச்சம் அடைகிறது!

தாகத்திற்குத் தண்ணீர்போல
தரமான நூல்களைத்
தேடித் தேடிப்
படிப்பதால் வெளிபடும்
வாழ்வு இனிக்கிறது!

அறைக்குள்
அடங்கிக் கிடந்த
எண்ணச் சிறைகளிலிருந்து
விடுதலை அளிக்கிறது!
நல்ல நூல்களின்
வாசிப்பு!

வாழ்வின் அடையாளம்
சுவாசிப்பதைப் போல்
வாசிப்பை நேசிப்பது!

3.    படைப்பு!
தற்புகழ்ச்சிக்காகவோ

பிறரை மகிழ்விப்பதற்காகவோ
எழுதப்படும் எழுத்துக்களை விட
உய்த்துணர்வதற்கும்
உட்பொருள் காண்பதற்கும்
நல்வழி காட்டுவதற்கும்
தெளிவான தேடலுடன்
சொல்லும் செய்தியும்
சொல்ல வேண்டிய செய்தியும்
ஏற்படுத்தும்
எழுத்தின் தேவையை!

4.    விரக்தி!
விரக்தி
வேதனையின் வித்துக்கள்!
முன்னேற்றத்தின் தடைக்கல்!
மனநிம்மதியின் எதிரி!

5.    நன்னெறிகள்!
சிந்திப்பது

மனித அறிவின்
பண்பாடு!
கற்பது
மனித வெற்றியின்
வாய்ப்பு!
செயல்படுவது
மனித ஆற்றலின்
வெளிப்பாடு!

6.    நம்பிக்கை!
சிந்திக்காமல்
சிறந்தவர்கள் இல்லை!
உழைக்காமல்
உயர்ந்தவர்கள் இல்லை!
நம்பிக்கை இல்லாமல்
நாளை இல்லை!

7.    அன்பு!
பிறரிடம்
நாம் வைக்கும் அன்பு
மகிழ்ச்சியை
அளிக்கவேண்டுமே தவிர
முட்டாளாக்கும் சக்தியாக
இருக்கக் கூடாது!

8.    நேர்மை!
பணம் மட்டுமல்ல!
மனமும் சார்ந்தது!

9.    உணவு!
உணவை
உரிய முறையில் உண்டால்
உபாயம்!
உரிய முறைதவறி உண்டால்
அபாயம்!

10. குறிக்கோள்!
பயனற்ற காரியங்களில்
நாம் நாட்டம் கொண்டால்
அது ஆசை!
பயனுள்ள காரியங்களில்
நாம் நாட்டம் கொண்டால்
அது குறிக்கோள்!

11. அச்சம்!
தடுமாற்றத்தின்

உச்சநிலை
அச்சம்!

12. நல்வாழ்வுக்கு!
தாழ்வு மனப்பான்மை

மட்டுமல்ல!
உயர்வு மனப்பான்மையும்
நல்வாழ்வுக்கு உகந்ததல்ல!

13. வெற்றி!
வெற்றி
அடுத்தவர் நமக்குத் தருவதல்ல!
விதைக்குள் விருட்சம் இருப்பது போல்
விடா முயற்சியும்
உற்சாகமான உழைப்பும்
உரிய ஊக்கமும்
தெளிவான திட்டமும் - இருந்தால்
வெற்றிக் கனி நம் கையில்!

14. உரிமை!
உரிமை என்பது!

உலக உயிர்கட்கு அளிக்கப்பட்ட
இயற்கை கொடை!
ஒருவர் கொடுப்பதுமன்று!
மற்றொருவர் வாங்குவதுமன்று!
அனைத்து உயிர்களுக்கும்
இயல்பாக அமைவது!
பறிக்கவும் அடக்கவும்
எவருக்கும் உரிமையில்லை!

15. வலி!
வலிகள் இல்லாத
வாழ்க்கை இல்லை!
வலிகளை் சந்திக்காமல்
வெற்றி இல்லை!

16. துணிச்சல்!
துணிச்சல் - என்பது
அச்சமில்லாத தன்மையல்ல!
அச்சத்தை ஒதுக்கிவிட்டு
செயலைத் தொடர்ந்து செய்வது!

17. கடமை!
'கடனே' என்று
ஆற்றுபவர்களும் உண்டு!
கடவுள் வழிபாடாக
ஆற்றுபவர்களும் உண்டு!

18. இங்கிதம்!
இங்கிதம்!
நேர்முறை நிகழ்வு அல்ல
காயப்படுத்தாமல் இருப்பது!
கனிவோடு இருப்பதல்ல
புண்படுத்தாமல் இருப்பது!
பாராட்டுவது அல்ல
பரிகசிக்காமல் இருப்பது!
ஏற்றிக் கூறுவது அல்ல
ஏளனம் செய்யாமல் இருப்பது!
இங்கிதம்!
ஒருவருடைய பண்பாட்டை
வெளிப்படுத்தும் பதாகை!

 

Comments

Popular posts from this blog

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...