இலக்கியமும் இசைக்கலையும் ஓவியமும் சிற்பமும் தனித்தனி ஊடகங்களாக இருந்து மனக் கருத்தாடல்களை நிகழ்த்துகின்றன . ஆனால் இசை , தனி ஊடகமாக இல்லாது வாய்ப்பாட்டோடு சேர்ந்தும் மெய்ப்பாடுகளுடன் கூடிய நடனத்தோடு இணைந்தும் பல்முனை ஊடகமாக ஆற்றல் பெற்றுத் திகழ்கிறது . இதனால் இசையை இலக்கியமாகவும் , இலக்கியத்தை இசையாகவும் பார்க்கும் பார்வை செல்வாக்குப் பெற்றுள்ளது . சங்க இலக்கியங்களில் இசை தலையாய இடத்தைப் பெறுகிறது . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ஆகிய ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு பண் வகுக்கப்பட்டிருந்தது . காலையில் பாடும் பண் , மாலையில் பாடும் பண் என்று வேறுபடுத்தப்பட்டிருந்தது . மணவிழாவில் பாடும் பண் , பிற சடங்குகளில் பாடப்படும் பண் பற்றிய குறிப்புகளும் உண்டு . யாழில் சிறிய யாழ் ( சீறியாழ் ) பெரிய யாழ் ( பேரியாழ் ) என்ற பகுப்பு இருந்தது . யாழின் அடிப்படையில் சிறுபாணாற்றுப்படை , பெரும்பாணாற்றுப்படை என்று ஆற்றுப்படை இலக்கியங்கள் பகுக்கப்பட்டிருந்தன . இ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!