Skip to main content

Posts

Showing posts from July, 2023

அபிடேகத்திற்குரிய கருவிகள்

  அபிடேகத்திற்குரிய கருவிகள்             இறைவனுக்கு அபிடேகம் செய்யக் கல், பித்தளை, செம்பு, வெள்ளி, பொன் முதலிய பொருள்களால் ஆனது. ·         பீடங்கள் – பல தலங்களில் கோமுகத்துடன் கூடிய அபிடேக உலோகப் பீடங்கள் இருக்கின்றன. தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப் பெரிய அலங்காரமான அபிடேகப் பீடம் இருப்பது குறிக்கத்தக்கது. ·         ஏக தாரை – ஒரே துவாரமுடைய குவளை ·         சத தாரை – நூறு துளைகளைக் கொண்ட சல்லடை. ·         சகஸ்ர தாரை – ஆயிரம் துளைகளைக் கொண்ட சல்லடை. இதனைத் திருமால் ஆலயங்களில் ‘சோணாயிரம் கொண்டு’ என்பர். ·         சங்கு – 108 அல்லது 1008 சங்குகள். ·         மடி சங்கு – நீரொழுகும் சிறு சிறு தூம்புகளைக் கொண்ட பசுவின் மடி போன்ற சங்கு; அபூர்வமானது. ·       ...

வணங்கும் முறைகள்

  வணங்கும் முறைகள் கோயிலுக்குள் இறைவனை வணங்கும் முறைகள் இரண்டு வகைப்படும். 1. நின்று வணங்கல், 2. கிடந்து அல்லது விழுந்து வணங்கல் என்பன. திரியாங்கம்           தலைக்கு மேல் இரு கைகளைக் குவித்து, நின்று வணங்குவது. இது எல்லோர்க்கும் உரியது.           தெய்வம், துறவிகள், முனிவர்கள் முதலியவர்களை வணங்கும்போது தலைக்கு மேலும், பெற்றோர் ஆசிரியர் முதலியவர்களை வணங்கும்போது முகத்துக்கு நேரும், உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் முதலியவர்களை வணங்கும்போது கழுத்துக்கு நேரும் கைகளைக் குவித்து வணங்குவது முறை என்பர். கைகள் குவிந்திருக்கும் போது தலை தாழ்ந்திருக்க வேண்டும். பஞ்சாங்கம்           தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு ஆகிய ஐந்து அங்கங்களும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குவது பஞ்சாங்க வணக்கம். இது பெண்களுக்கு உரியது. அட்டாங்கம்           தலை, கை இரண்டு, காது இரண்டு, தோள்கள் இரண்டு, மேவாய் ஆகிய எட்டு அ...

அரசமரம் – விநாயகர் – பாம்புக்கல் வழிபாடு

  அரசமரம் – விநாயகர் – பாம்புக்கல் வழிபாடு அரசு, வேப்ப மரங்களை இணைத்தும் பிணைத்தும் அவைகளுக்குத் திருமணம் செய்கின்றனர். இத்திருமணம் வைதிக முறைப்படி நடைபெறுகிறது. அரசு - ஆண்; வெப்பத் தன்மையுடனும், வேம்பு - பெண்; குளிர்ந்த தன்மையுடனும் காற்றைத் தருகின்றன. இவை மருத்துவக் குணமுடைய மூலிகை மரங்கள்; மகளிரின் மலட்டுத் தன்மையை அறவே நீக்கும் மருத்துவ ஆற்றல் உடையவை. ‘அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாள்’ என்ற பழமொழியை எல்லாரும் அறிவார்கள். அரசன் = அரச மரம். அரச மரத்தை வழிபட்டு வலம் வந்தால் நிச்சயம் மகப்பேறு கிடைக்கும் என்று நம்பி, புருஷனை விரட்டிக் கைவிட்டாளாம் ஒரு பெண்! உண்மைதான். மகப்பேறு தரும் அரச மரத்தின் ஆற்றலை இப்பழமொழி காட்டுகின்றது. ஓர் அகன்ற மேடையின் மீது, அரசு, வேப்பமர நிழலில், விநாயகர் சிலையும், பாம்புக் கல்லும் நிறுவப்பட்டிருப்பதைப் பல கோயில்களில் காண முடியும். பாம்புக் கல்லில் இணைந்துள்ள பாம்புகளைப் போல தம்பதிகள் அரவணைக்க – புணரவேண்டும். பாம்புக் கல்லை வணங்கி வழிபட்டால் நாக தோஷம் முதலிய பல தோஷங்கள் விலகும். விநாயகர், பாம்புகளின் அருளாலும், அரசு, வேப்ப மரங்களின் மருத்துவ ஆற்...

பாம்பும் ஆறு சமயங்களும்

  பாம்பும் ஆறு சமயங்களும்           நாகப் பாம்பு ஆறு சமயப் பரம்பொருள்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. அத் தெய்வங்களை வழிபடுகின்றவர்கள் பாம்புகளையும் வழிபடுகின்றார்கள். பூக்களுடன் பிணைந்த பூ கதம்பமாகப் பொலிவு பெறுகின்றது. ·         காணபதியம் – கணபதியின் ஆயுதமாகவும், கச்சாகவும், குடையாகவும் இருப்பது பாம்பு. ·         சைவம் – சிவனுக்குப் பாம்பு அணிகலனாகவும் ஆயுதமாகவும் பயன்படுகிறது. பாம்பு குடை பிடிக்க விளங்கும் லிங்கம் ‘நாகலிங்கம்’ இதே வடிவத்தில் அமைந்த அற்புதமான ஒரு பூ நாகலிங்கப் பூ. ·         வைஷ்ணவம் – ஆதிசேடன், விஷ்ணு படுத்தால் படுக்கையாகிறது; சாய்தால் அணையாகிறது; இருந்தால் ஆசனமாகிறது; நடந்தால் குடையாகிறது; மரவடியாகிறது. ·         சாக்தம் – சக்தியின் ஒரு வடிவமாகப் பாம்பு கருதப்படுகிறது. மேலும் பெண் தெய்வங்கள் பலருக்குக் குடையாக விரிந்திருப்பதும் பாம்புதான். ·     ...

ஆ தீண்டு குற்றி

  ஆ தீண்டு குற்றி             பசுக்கள் தம் உடம்பில் தோன்றும் தினவை இதமாக உராய்ந்துச் சுகமாகத் தணித்துக் கொள்வதற்கு வசதியாக, அவை மேயும் மந்தை வெளியில் ஒரு நீண்ட கருங்கல்லை நட்டு வைப்பார்கள். இக்கல்லை ‘ஆ தீண்டு குற்றி’ அல்லது ‘ஆ தீண்டு கல்’   அல்லது ‘ஆ உறிஞ்சி தறி’ என்று அழைத்தனர். இதனை நாட்டுவது மிகச் சிறந்த தருமச் செயலாக மதிக்கப்பட்டது. பசுக்களின் தினவைத் தணித்துக் கொள்வதற்கும் ஒரு தருமச் செயல் ஆகும். பார்வை நூல் 1.   இலக்கியங்களில் வழிபாடுகள் – டாக்டர்.டி.செல்வராஜ், அமராவதி பதிப்பகம், சென்னை 600 004.

பழந்தமிழர் வாழ்வில் குற்றங்களும் தண்டனை முறைகளும்

  பழந்தமிழர் வாழ்வில் குற்றங்களும் தண்டனை முறைகளும்           சமுதாயத்தில் உறுப்பினராக வாழும் மக்கள் தங்களது வலிமையைப் பிறருக்கு எதிராகப் பயன்படுத்த முற்பட்ட போது , அது குற்றம் எனக் கருதப்பட்டது . அவ்வாறு குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனையும் , மெலியோர்களுக்குப் பாதுகாப்பும் வழங்கிடும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டது .           ஒவ்வொருவரும் தங்கள் நலனையும் உரிமையையும் இழக்காமல் இருப்பதற்கு அடுத்தவர் ஆற்ற வேண்டிய கடமையை அரசுச் சுட்டிக்காட்டியது . தங்களுக்குரிய கடமைகளில் இருந்து தவறுபவர்களும் குற்றம் செய்தவர்கள் எனக் கருதப்பட்டனர் . குற்றம்           ஒருவர் தன் நலனைப் பேணுவதற்காக அடுத்தவரின் உயிர் , உடல் , உடைமை முதலியவற்றிற்குத் தீங்கிழைக்கும் செயலை இன்று குற்றம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர் .           ‘ குற்றம் ’ என்ற சொல்லுக்குப் பிழை , பழி , துன்பம் , தீங்கு எனப் பலப் பொருள்களைத் தருகிறது . ...