Skip to main content

Posts

Showing posts from January, 2023

பழந்தமிழரும் விழாக்களும்

  பழந்தமிழரும் விழாக்களும்           ‘விழா’ என்று தோன்றியது என்பது வரையறைச் செய்ய இயலாது. தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத நிலையில் இயற்கைச் சக்தி மற்றும் கருவிகளின் செயற்பாட்டை மட்டுமின்றி, கனவுகள் தோற்றம் குறித்தும், பண்டைய மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாத   நிலையில் அப்பொருள்களுக்கு மிகுதியான ஆற்றல் இருப்பதாக புராதன மனிதன் எண்ணினான். அவ்வாற்றலை வழிபடும் வகையில் ‘புனிதப் பொருள் வழிபாடு தோற்றம் பெற்றது என்பர்.          காலப் போக்கில் வழிபடும் பொருட்டு இயற்கை சக்திகளுக்கு உருவம் அளித்தான். அதனை மனிதனின் உருவாக்கக் கற்பனை என்பார் மானிடவியலார். இவ்வாறு தன் தேவைக்கும், மகிழ்ச்சிக்கும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் விழா நம்பிக்கைக்குரிய செயலாக வழக்கில் இடம் பெற்றது.           தமிழர் விழாக்கள் நோன்பும், சடங்கும் இணைந்து செயற்படும் நிலையில் அமைவதாகச் சுட்டுவர். விழாக்களில் நோன்புச் செயலும், சடங்கும் ஒருமித்து இலக்கியங்கள் உணர்த்துகின்றன. அந்நிலையில் ப...

கோயில்

  கோயில்         கோ என்பதற்கு அரசன் என்பது பொருள். கோயில் என்பது அரசனது இல்லம் அல்லது அரண்மனை என்ற பொருளைத் தரும். எனவே, முதலில் அரண்மனையைக் குறித்த இச்சொற்றொடர் பின்னர் உலகத்தார் அண்டத்திற்கே அரசன் எனக்கருதிய கடவுளின் ஆலயத்தைக் குறிக்கவந்தது. பிற்கால இலக்கண விதிப்படி ஓ என்ற உயிரெடுத்தின் பின் உயிரெழுத்து வருமாயின் வகரமே உடம்படுமெய்யாக வரும். இதற்கேற்பக் கோயில் என்ற வடிவமும் வந்தது. கோயில் என்றது மிகப் பழைய சொல்லின் வடிவமாகும்.           கோயில் என்பது அரண்மனை என்ற பொருளில் சிலப்பதிகார காலத்திலும் வழங்கியது. பதிற்றுப்பத்தின் இறுதிப பதிகமும் பட்டத்தரசியைக் கோயிலாள் என்றே வழங்குகிறது. பரிபாடலின் இரண்டாவது செய்யுளில் வரும் கோயில் என்ற சொல்லுக்கு ஆலயம் என்று உரையாசிரியர் பொருள் கொண்டிருந்தாலும் அரண்மனை அகநகராக அமைவது வழக்கமாதலின் அங்கேயும் கோயில் என்பதற்கு அரண்மனை என்றே பொருள் கொள்வது பொருந்தும். மதுரையின் நடுவிடத்தில் நிழல் ஒரு புறமும் வீழாத நிலையில் நடுப்பகலில் கணக்கிட்டு அரண்மனை கட்டினார்கள் என்று நெ...

தூதர்

                                                                                                 தூதர்            ஒரு வேந்தனின் சார்பாளாராக மற்றொரு வேந்தனின் அரசிலோ அவனது நாட்டின் பகுதிகளிலோ, நேரடியாவோ மறைமுகமாகவோ செயல்பட்டவர்கள் தூதர் என்று அழைக்கப்பெற்றனர். சங்ககாலத்த அரசர்கள் தூதர்களை ஏவல் கொண்டனர். தொல்காப்பியம்            ”ஓதல் பகையே தூதிவை பிரிவே” என்று தூது பற்றிக் குறிப்பிடுகின்றது.            ”ஓதலும், தூதும் உயர்ந்தோர் மேன” என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதன் மூலம் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தவர்களே தூது செல்ல முடியும் என்று தெரிகிறது.  ...

சிலப்பதிகாரத்தில் ஆடை உடுத்தல்

  சிலப்பதிகாரத்தில் ஆடை உடுத்தல்             மனித நாகரிகத்தின் சின்னமாக விளங்குவது ஆடை. இது மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று. தட்பவெட்ப நிலைகளுக்கேற்ப உடற்பாதுகாப்பிற்கு ஆடை அணிதல் இன்றியமையாததாகும். கலை உணர்வையும், பொழுதுபோக்கினையும் மனித மனம் விரும்பியதால் அதற்குத் தகப் பஞ்சும், பட்டும், மயிராடையும் உருவாகின. தொழிலுக்கும், இனத்திற்கும் ஏற்றவாறு நிறமும், உடுக்கும் உடையும் மாறுபடுவதுடன் மகளிருக்கும் மைந்தருக்கும் என வேறு வேறு வகையான ஆடைகளும் தோற்றம் பெற்றன. திருமண ஆடை         திருமண ஆடை பற்றிய செய்தியினைச் சிலம்பு சுட்டவில்லை. ஆனால் திருமணக் காட்சியில், ‘ கோடிக் கலிங்கம் உடுத்து’ (21:32 ) என்ற தொடரால் திருமணத்தில் கோடிக் கலிங்கம் அணியப் பெற்றமைத் தெளிவுபடுகிறது. இவ்வாடை கண்ணகியின் திருமணத்தில் அமையாது, கிளைக்கதையில் கற்புடைய மகள் ஒருத்தி அணிந்த செய்திக் குறிப்பால் உணர முடிகிறது. துன்பத்தில் ஆடை           கோவலனின் பிரிவுச் சூழலில் கண்ணகி மெ...

மூவேந்தர்

  மூவேந்தர்         சங்க இலக்கியங்கள் குறுநில மன்னரை ‘மன்னர் ’ என்றும், சேர, சோழ, பாண்டிய மரபில் வந்தோரை ‘வேந்தர்’ என்றும் குறிப்பிடுகின்றன .  மூவேந்தரைச் சேர, சோழ, பாண்டியர் என்று அழைக்கும் மரபு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே மூவேந்தர் மரபு நிலைபெற்றுவிட்டதை, ”வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்ற தொல்காப்பிய நூற்பாவினாலும், அவர்களது அடையாள மாலையைக் குறிப்பிடும்போது,           ”போந்தை வேம்பே ஆரெனவரூஉம்              மாபெருந்தானையர் மலைந்தபூவும்” (தொல்.பொருள்.63:4-5) என்று குறிப்பிடுவதாலும் அறியமுடிகிறது. மேலும் தமிழ் இலக்கியங்கள்,           ”மண்டிணித் தடக்கைத் தண்டமிழ்க் கிழவர்              முரசு முழங்கு தானை மூவருள்ளும்” (புறம்-35:3-4) என்றும்,         ”மலர்தலையுலகத்து மன்னுயிர் காக்கும்           முரவு...

வேளாளர்

வேளாளர்         வேளாளர் என்பவர் உழுதுண்பார், உழுவித்துண்பார் என இருபிரிவினராயிருந்தனர். இவருள் உழுதுண்பார் உழுவித்துண்பாரினும் தாழ்தோராகக் கருதப்பட்டனர். உழுவித்துண்ணும் வேளாளர் பிறரை ஏவி வேலைக் கொள்ளும் தன்மையர்.           வேளாளரே உயர் வகுப்பினராவர். அவர்களே நாட்டின் உயர்குடிப் பெருமக்கள் அல்லது நிலக்கிழார் மரபினராயிருந்தனர். இவர்கள் வெள்ளாளர் என்றும் காராளர் என்றும் அழைக்கப்பட்டனர்.           சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் தமிழக வேளிர்களில் பெரும்பாலானவர்களும் வேளாளர் மரபைச் சேர்ந்தவர்கள். சிறிதளவே நிலமுடைய ஏழை வேளாளர் குடியினர் ‘வீரகுடிவழவர்’ என்று அழைக்கப்பட்டனர். மற்ற வேளாளர்கள் செல்வக் குடியினர் என்பது தெரியவருகிறது.           வடுக நாட்டை வென்ற வேளாள குடியினர் ‘வேளமர்’ என்று அழைக்கப் பெற்றனர். இன்றும் அங்குள்ள பெருநிலக்கிழார்கள் அனைவரும் பெரும்பாலும் இவ் வேளமர் வகுப்பினர்தான்.     ...

சிலம்புகழீஇ நோன்பு

  சிலம்புகழீஇ நோன்பு         பண்டைத் தமிழர் திருமணங்களில் ‘சிலம்புகழீஇ நோன்பு’ என்ற ஒரு சடங்குமுறை நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக் காணப்பட்டாலும், இந்நோன்பினைப் பற்றித் தெளிவான விளக்கங்கள் கிட்டவில்லை. சிலம்பு என்பது காலில் அணியும் ஓரணியாகும். இதனை, ‘அஞ்செஞ் சிலம்பு’ எனச் சிலப்பதிகாரமும், ‘தொடியோள், மெல்லடி மேலவும் சிலம்பே’ எனக் குறுந்தொகையும் குறிப்பதைக் காணலாம். தலைவியின் காலிலுள்ள சிலம்பை நீக்குதலாகிய சடங்கே சிலம்புகழீஇ நோன்பாகும்.           ‘சிலம்புகழீஇ’ என்பதற்குச் சிலம்பினை நீக்குதல் என்று பொருள் கொள்ளலே பொருந்துவதாகும். நற்றிணையில் தன் உடன் போக்கினைத் தாய் அறிய ஏதுவாகும் என எண்ணிய தலைவி தன்காற் சிலம்பினைக் கழற்றி வைத்துச் செல்வதனை,           ”வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்           அறியமை சிலம்பு கழீஇ” எனவரும் தொடர்கள் கொண்டு அறிய முடிகிறது. ஆங்கும் ‘சிலம்புகழீஇ’ என்பது சிலம்பினை நீ...

பெண்ணின் பருவச் சடங்கு

  பெண்ணின் பருவச் சடங்கு           ஒரு பெண்ணின் முதல் பூப்பு நிலையே பருவம் எய்தியதனைக் குறிக்கும். முதல் பூப்பினால் ஒரு பெண்ணின் உடல்நிலை தாய்மை எய்துதற்குரிய பக்குவத்தினை அடைவதால் அதனை மணப்பருவமாகவும் கொண்டனர். ஒரு பெண் பருவம் உற்றதும் அவள் பேதைப் பருவத்திலிருந்து நீங்கிப் பெதும்பைப் பருவத்தை அடைந்தாள் என்பதும், அப்பெதும்பைப் பருவம் கன்னிமைப் பருவம் என்பதும் குறிப்பிடத் தக்கது.           அஞ்சாது புறத்துப் போய் விளையாடும் ஒரு பெண் பருவம் உற்ற நிலையில் எய்திய மாற்றத்தினையும், தீய சக்திக்கு ஆட்படாதவாறு, அப்பொழுது அவளுக்குச் சில காப்புகள் செய்ததையும்,           ”முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின           தலைமுடி சான்ற தண்தழை யுடையை           அலமரல் ஆயமொ டியாங்கணும் படாஅல்           மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய ...