என் எண்ணச் சிதறல்கள் ! (3) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2. வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3. படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...
தொலைநோக்கு ( புத்தக மதிப்புரை ) இன்று நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சிக்காக , தொலைநோக்கு என்னும் தலைப்பில் முனைவர் ஆ . மணவழகன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம் . இப்புத்தகத்தைச் சென்னை , அய்யனார் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் . முனைவர் ஆ . மணவழகன் சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தவர் . சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் . செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘ இளம் தமிழ் அறிஞர் ’ என்ற விருதினைப் பெற்றவர் . தற்பொழுது எஸ் . ஆர் . எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார் . இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியரின் நூலான ‘ தொலை நோக்கு ’ என்னும் ஆய்வு நூலில் , இக்கால சமூகத் தேவைகளையும் , பழந்தமிழர் சமூக ச் சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டு விளக்கும் வகையில் இந்நூலை இயற்றியுள்ளார் . பழந்தமிழர் இலக்கியப் பதிவுகளைக் கொண்டு , அக்காலச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தொலை நோக்குச் சிந்தனைகளை முதன்மை நோக்கமாகவும் , ...