நாட்டுப்புற மருத்துவ முறைகள் நாட்டுப்புற மக்கள் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் மிகுதியும் நம்பிக்கை வைத்தள்ளனர் . தங்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் கால்நடைகள் , பயிர்கள் ஆகியவற்றிற்கு ஏற்படும் நோய்கள் அனைத்தும் தெய்வங்களின் சீற்றங்களினாலேயே உண்டாகின்றன என்று நம்புகின்றனர் . தெய்வக்குற்றம் , முன்வினை , மற்றவர்களின் தீயப் பார்வை ஆகியவற்றால்தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் முன்னோர்களின் சீற்றம் , தீய ஆவிகளின் பார்வை ஆகியவற்றால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்பதும் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை . ஆகவே , அதற்கு ஏற்றவாறு நோய்தீர்க்கும் முறைகளைக் கையாளுகின்றனர் . தலைவியின் உடல்வேறுபாட்டிற்குக் காரணம் தலைவியின் களவு ஒழுக்கம் என்பதை அறியாமல் வேலன் வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்ததைப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன . சங்க காலம் தொடங்கி இன்று வரையில் நாட்டுப்புற மக்கள் இடையே நோய் தாக்கியதற்குக் காரணம் தெய்வக்குற்றமே என்று நம்பி வருகின்றனர் . ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!