பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூலில் பெண்ணியச் சிந்தனைகள் ஆண் , பெண் என்ற இருவரில் உயர்வு தாழ்வு இல்லை . பெண்களுக்கு முதன்மை வழங்கவேண்டும் என்பது அறிவும் அன்பும் வாய்ந்தோர் கருத்து . பெண்களுக்கு இயல்பாக அமைந்துள்ள குணம் , தொண்டு , கடமை முதலியவற்றை நோக்கும் போது முதன்மை பெற்று விளங்குவது நன்கு புலனாகும் . ஆண்களின் பேற்றிற்கும் , வளத்துக்கும் , நலத்துக்கும் , பிற ஆக்கத்திற்கும் நிலைக்களனாயிருப்பது பெண்ணுலகம் என்பது எவரும் அறிந்த ஒன்று . ஆகையால் முதன்மை வழங்கினால் நேரும் இழுக்கென்ன ? நமது நாடும் பெண்மையும் நம் முன்னோர்கள் கல்வியைக் ‘ கலைமகள் ’ என்றும் , திருவைத் ‘ திருமகள் ’ என்றும் , ஞானத்தைப் ‘ பரை ’ என்றும் கொண்டது ஆராயத்தக்கது . நாட்டைப் பலவழிகளிலும் காட்டைக் காக்கும் காட்டுக் கன்னியை ‘ வனதேவதை ’ என்று வாழ்த்துவதும் , பல்லுயிர்களைத் தாங்கும் நாட்டைத் ‘ தாய் நாடு ’ என்றும் வாழ்த்துவதும் எண்ணவேண்டும் . மாணிக்கவாசகரு...
நாட்டுப்புற இலக்கியத்தில் சந்தை மேலாண்மை நாட்டுப்புற பாடல்களில் பலவகையான சந்தைகளில் என்னென்ன பொருள்கள் எவ்விடங்களில் விற்கப்படுகின்றன என்றும் என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி , இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற செய்திகளையும் அறிந்து கொள்ளலாம் . கிராமத்துச் சந்தைகளில் மொத்த விற்பனையும் நடைபெறும் . இவை பெரும்பாலும் வாரச் சந்தைகளாகும் . இன்றும் கிராமங்களில் நம் நாட்டுப் பாடல்களைப் போல வாரச் சந்தைகளும் வாழ்ந்து வருகின்றன . வாரச் சந்தை முறையில் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தை கூடுகிறது . சிறிய பெரிய வியாபராங்கள் இங்கே நடைபெறும் . குறிப்பாக விவசாயப் பொருள்களும் , ஆடு மாடுகளும் இங்கே விற்கப்படும் . நகர்ப்புற அங்காடிகள் சிலப்பதிகாரத்தில் வருகின்ற அழகிய அங்காடிகள் தொன்று தொட்டே நம் நாட்டில் இருந்துவந்தன . பகல் நேரத்தில் செயல்படுவன ‘ நாளங்காடி ’ என்றும் , இரவு நேர அங்காடிகளுக்கு ‘ அல்லங்காடி ’ என்றும் கூறுவர் . ...