வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல் ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு , விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96, விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் . முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...
‘கழுதை தேய்ந்து கட்(டெ)டிரும்பு போலாச்சு’ கழுதை – என்றால் அழகு என்றொரு பொருள் உண்டு. மேலோட்டமாகப் பார்த்தால் நன்கு உறவாடி பழகி நல்ல நிலையில், நன்றாக இருந்தவர்கள் நலிவு பெறும்போது, மாற்றம் கண்ட இடத்து, மாறுதலை உணர்தலை முகமாகச் செய்வர். ஆனால் உண்மையில் கட்டெறும்பு அல்ல. கட்டி வைத்த இரும்பு. அதாவது கிடங்குகளில் கம்பியாகவோ, மற்ற இரும்புப் பொருட்களாகவோ நீண்ட நாள் புழக்கத்தில் இல்லாமல், பயன்படுத்தாமல் இருந்தால் துருப்பிடித்து வீணாகி விடும். தன்மை குறைந்து, தேய்ந்து பயனற்றதாகி விடும் என்பதை உணர்த்தும் உயரிய மொழி! கட்டிரும்பு தேய்ஞ்சு போச்சாம்! கழுதை – அழகு நிலையான ஒன்றல்ல. நாளடைவில் பொலிவு மலிந்து தேய்ந்து விடுதல் போல நீண்ட நாள் கட்டி வைத்த இரும்பும் தேய்ந்து போகும் என்பதாகும். இதே நோக்கில்தான் ஔவையும் சங்க காலத்தில் இருமன்னருக்கிடையே நடக்கவிருந்த போரில், அதைத் தடுக்க மன்னரின் படை மற்றும் ஆயுதங்களின் சிறப்பைக்...