குரவைக் கூத்து பண்டைய கூத்துகளில் குரவைக் கூத்து முக்கியமானது. பழம் இலக்கியங்களில் அதிகம் பேசப்படுவது. இக்கூத்து அய்த்தல், தழுவுதல், முறைதல், தூங்குதல், நிற்றல் என்னும் சொற்களின் அடைமொழிகளுடன் கூறப்படுவது. ஆரவாரம் மிக்க இக்கலையைப் பார்த்தவர்கள் பாமரர்கள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இக்கூத்து முதலில் குறிஞ்சி நிலத்தில் பொழுதுபோக்கு வழிபாடு அம்சமாக உருவாகி பிற நிலங்களுக்கும் பரந்திருக்கிறது. குறவர் அவை என்பது குரவைக்கூத்து ஆனது என இதை விளக்குவர். குரவை என்பது குறவையிலிருந்து தோன்றிய சொல் என்ற கருத்து உண்டு. மதுரைக்காஞ்சி குன்றுதோறும் நின்ற குரவை எனக்கூறும். குரவைக்கூத்து ஒரு நிகழ்த்து கலை. இதில் 7 அல்லது 9 கலந்து கொள்ளுவர் என உரையாசிரியர்கள் குறிக்கின்றனர். இது இரு பாலருக்கும் உரிய கூத்து. இக்கூத்தைக் குறிக்கும் சொற்களில் தழுவுதல் என்ற சொல் குறிப்பிடத்தகுந்தது. குரவை தழீஇ, பல்பிணை தழீஇ, மேனித் தழீஇ என்ற பழம் சொற்கள் பிணைந்த...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!