திராவிட மக்களின் விளையாட்டுக்கள் திராவிட மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் இலக்கிய வழக்கையும் பேச்சு வழக்கையும் பெற்றுள்ளன. மீதமுள்ள இருபது மொழிகளும் பேச்சு வழக்கை மட்டும் உடைய மலை சாதியினர் மொழிகள். மொழியில் ஒற்றுமை காணப்படுவதைப் போல திராவிடர்களின் பண்பாட்டிலும் விளையாட்டுக்களிலும் ஒற்றுமைக் கூறுகள் காணப்படுகின்றன. சடுகுடு ஆண்களால் ஆடப்படும் புறவிளையாட்டு. இதனை ஆடும்போது ‘சடு குடு’ என்னும் ஒலிக்குறிப்புத் தொடர் ஆளப்படுவதால் இவ்விளையாட்டு இப்பெயர் பெற்றது. இதனைத் தெலுங்கர் ‘பலிஞ்சப்பளம்’ என்று அழைப்பர். இந்தியாவில் உள்ள பட்டி தொட்டிகளில் எல்லாம் மணற்பாங்கான இடங்களில் விளையாடப்படுகிறது. மேலும், பாகிஸ்தான், இலங்கை, பர்மா, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளிலும் விளையாடப்படுகின்றது. இவ்விளையாட்டு பழந்தமிழர் போர் முறையான ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பதன் அடிப்படையில் சடுகுடு தோன்றியிருக்கல...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!