Skip to main content

Posts

Showing posts from October, 2023

‘இளமையில் கல்’

  ‘இளமையில் கல்’   ·         இளமை என்பது வளர்ந்து வரும் இளமைப் பருவமாகும். எனவே   இளமைப் பருவத்தில் அறிவு என்னும் செல்வத்தைத் தேடி பெறுதல் வேண்டும். ·         பசுமையான காலத்தில் பார்வைக்கு அழகும் அதன் இயல்பும் நம் மனதில் மாறாமல் பதியும்.   அப்பொழுது உலகில் அறிய வேண்டியவற்றை அறிவதற்கு ஏற்ற மன இயல்பு இருக்கும். ·         வீட்டுக் கவலை, பணப்பிரச்சனை என்று கவலை இல்லாது மாசற்று விளங்கும் பருவம். அக்காலத்தில் கற்க வேண்டியவற்றை தெரிந்து பதியச் செய்து கொள்வதால் அக்கல்வி, அதனால் வரும் நல்லொழுக்கம் நீங்காது முழுப் பயனையும் பெற முடியும். ·         ‘இளமையில் கல்’ என்ற ஔவையார் கூறிய அறமொழி இளமைப் பருவத்தைக் கற்பதற்கே செலவிடு என்று அறிவுறுத்துகின்றது. ·         கல்விச் செல்வம், அறிவுச் செல்வம், அறச் செல்வம், பொருட்செல்வம் என்று எல்லாவற்றையும் இளமைப் பருவத்தில் பெறுதல் வேண்டும்.   ”நரைவர...

என்றும் இளமையாக இருப்பதற்கு....?

  என்றும் இளமையாக இருப்பதற்கு....?   வடக்கிருந்த கோப்பெருஞ் சோழனைக் காண சென்ற பிசிராந்தையாரிடம், ஆண்டுகள் பலவாகியும் நரை நுமக்கு இல்லையே! – ஏன் என்ற வினாவுக்கு விடையாகப் பாடிய பாடல். பாடியவர் – பிசிராந்தையார் புறநானூறு, பாடல் எண் – 191 துறை – பொதுவியல், பொருண்மொழிக் காஞ்சி             யாண்டுபல வாக நரையில ஆகுதல்         யாங்காகியர் என வினவுதிர் ஆயின்         மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்         யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்         அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை         ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்         சான்றோர் பலர்யான் வாழும் ஊரே!             வாழ்ந்து பல ஆண்டுகளாகி வயது முதிர்ந்த நிலையிலும் உமக்குத் தலை நரைக்காது இருக்கிறதே! இதற்கு என்ன க...

பிள்ளைகள் தரும் இன்பம் பேரின்பம்

  பிள்ளைகள் தரும் இன்பம் பேரின்பம்   பாடியவர் – பாண்டியன் அறிவுடை நம்பி புறநானூறு, பாடல் எண்- 188           செல்வம் நிறைந்து இருந்தாலும், கூடி உண்ணக் கோடி சுற்றம் இருந்தாலும், பெற்றோர்க்குக் குழந்தைகள் தரும் இன்பம் குறைவில்லாப் பேரின்பம் என்பதை விளக்கும் அழகிய பாடல்.          படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்         உடைப்பெரும் செல்வர் ஆயினும் இடைப்படக்         குறுகுறு நடந்து சிறுகை நீட்டி         இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்         நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்           மயக்குறு மக்களை இல்லோர்க்குப்         பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே                 பல செல்வ...

நன்றே தருக! இன்றே தருக!

  நன்றே தருக! இன்றே தருக!   புறநானூறு பா.எண்-169 பாடியவர் – காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பிட்டங் கொற்றனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது. புலவரின் வறுமை அவரின் பொறுமைக்கே உலை வைக்கிறது.           நும்படை செல்லும் காலை அவர்படை         எடுத்தெறி தானை முன்னரை எனாஅ         அவர்படை வரூஉம்காலை நும்படைக்         கூழை தாங்கிய அகல் யாற்றுக்         குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ                 அரிதால் பெருமநின் செவ்வி என்றும்         பெரிதால் அத்தைஎன் கடும்பினது இடும்பை         இன்னே விடுமதி பரிசில் வெல்வேல்         இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்    ...

விக்கிரக வணக்கம்

  விக்கிரக வணக்கம் ”கடவுள் எங்கும் நிறைந்தவர். அவருக்கு ஓர் உருவமும் இல்லை. உருவம் உள்ளவர் கடவுள் ஆகமாட்டார். ஆண்டவனுக்கு உருவம் வைத்து வணங்குவதை விட அறியாமை வேறொன்றுமில்லை”. என்று சில மதவாதிகள் கூறுகின்றனர். மதப்பற்றும், கடவுள் நம்பிக்கையும் உள்ள அறிஞர்களும் இதை ஒப்புக்கொள்கின்றனர். சித்தர்கள் என்ற பெயருடைய தமிழர்களும் உருவ வணக்கத்தை வெறுத்தனர். சித்தர்கள் என்றால் அறிஞர்கள் என்று பொருள். கல்லாலும், செம்பாலும், உருவம் செய்து வைத்துக் கடவுளை வணங்குவதிலே பொருளில்லை என்று என்று கூறியுள்ளனர். கல்லிலும் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே?           தமிழ் நாட்டிலும் உருவ வணக்கமுறை இருந்ததைத் தொல்காப்பியத்தால் அறியலாம். போலிலே வீரச் செயல் புரிந்து மறைந்து போன வீரர்களுக்குக் கல்நட்டு வணங்கும் வழக்கம் தமிழ்நாட்டிலே இருந்தது. வீரர்களின் நினைவுக் குறியாக நடப்பட்ட கல்லில் அவ்வீரர்கள் குடி கொண்டிருப்பதாகவே கருதினர். அந்தக் கற்களுக்குப் படையலிட்டு வணங்கி வழிபாடு செய்தனர். விழாவெடுத்துக் கொண்டாடினர். இது தமிழர்களின் பழமையாக வழக்கம். இந்த வழ...

‘அகல உழுவதிலும் ஆழ உழு’

  ‘அகல உழுவதிலும் ஆழ உழு’             உழவுத் தொழிலின் முதல்படி நிலத்தை நன்கு உழுது சமன் செய்த பின்னரே மற்ற வேலைகள்! விதை நடுவது, களை எழுப்பது, நீர் இறைப்பது எனத் தொடரும். நிலத்தை உழுவதன் முதல்கட்டப் பணி எப்படி இருக்க வேண்டும். ‘அகல உழுவதிலும்’ – இச் சொல்லாட்சியைப் பாருங்கள் – எதையும் இப்படிச் செய்யாதே என்று நேரடியாகப் பட்டென்று நம்மைப் போல் சொல்லாமல் நயமாக எப்படிச் செய்தால் நலம் என்பதையும் இணைத்துச் சொன்ன பாங்கு நமது முன்னோர்களின் சான்றாண்மைக்குச் சான்றாகும்.           ஏன் அப்படிச் சொன்னார்கள்? நாம் நீண்ட பரப்பரளவை மேலோட்டமாக உழுதால் மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நன்றாக, ஒன்றாகக் கலந்திருக்காது. பயிருக்குத் தேவையான உப்புச் சத்துக்கள் கிடைத்தால் தானே பயிர் நன்கு வளரும். அதிக நிலத்தை உழுது பெறும் பயனைவிடக் குறைந்த பகுதியை ஆழமாக நன்கு உழுதினால் பெரும் பயன் விளையும் என்று எவரும் புரிந்து கொள்ளக் கூடிய மேலோட்டமான கருத்து. அன்றைய கல்வி முறை (ஆழ உழுதல்)     ...

ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை

  ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை           ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கு தாய், தந்தை, நாட்டை ஆள்பவர் என்று அனைவரும்   தன் கடமைகளைச் செய்தால் அந்தப் பிள்ளை நாட்டின் நல்ல குடிமகனாகவும், வீரனாகவும் திகழ்வான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. அதுபோல நம் பிள்ளைகளுக்குக் கல்வியோடு நல்ல வேலை வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்தால் அவன் எதிர்காலம் சிறப்பாக அமையும்.   புறநானூறு பா எண் – 312 பாடியவர் – பொன்முடியார் ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்நடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் உருக்கிக்   களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.             பெற்று வளர்த்து ஆளாக்குவது தாயின் கடமையாகும். இப்படிப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளையைக் கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோனாக்குவது தந்தைக்குரிய கடமையாகும். அவனுடைய போர்ப் பயிற்சிக்கு, வேல் வாள் முதலிய ஆயுதங்களை வடித்துத் தருதல் கொல்லு வேலை செய்கி...

ஆட்சியாளர் கடமைகள்

  ஆட்சியாளர் கடமைகள்                     ஒரு நாட்டை ஆளும் அரசன் மக்களை வாட்டி வதைக்காமல் வரி வசூலிக்க வேண்டும் என்பதை அழகிய யானை புகுந்த வயல் உவமையால் விளக்கும் பாடல்.     மக்களிடம் வரி வசூலிக்கும் முறை புறநானூறு பாடல் எண் – 184 பாடியவர் - பாண்டியன் அறிவுடை நம்பியைப் பிசிராந்தையார் பாடிய பாடல்.   காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும் நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே   கொடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத்   தானும் உண்ணான் உலகமும் கெடுமே!   விளைந்த வயலிலிருந்து நெல்லைக் கொண்டு போய்ச் சேமித்து வைத்துக் கொண்டு, கவளம் கவளமாகக் கொடுத்து வந்தால், ஒரு ‘மா’ வுக்கும் குறைவான நிலத்தில்   விளைந்த நெல் கூட யானை...

கற்க! அதன் வழி நிற்க!

  கற்க! அதன் வழி நிற்க!           ஒருவருக்குக் கல்வி சிறப்பாகக் கொடுத்தால் கல்வியோடு  மற்றப்  பண்புகளான மரியாதை,   கீழ்படிதல், பணிவு   போன்ற அனைத்துப் பண்புகளும் வந்து சேரும். வீரத்தைப் போற்றும் புறநானூற்றில் கல்வியின் மேம்பாடு குறித்து ஒரு மன்னனே பாடியுள்ளார்.     புறநானூறு பாடல் எண் – 183 பாடியவர்- பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் மேன்மையைப் பற்றி பாடியது.   கற்றல் நன்றே! கற்றல் நன்றே!   உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே! பிறப்புஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும், மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவனும் அவன்கட் படுமே.   பொருள்: கற்பிக்கும் ஆசிரியருக்குத் தேவைப்படும் போது உதவிகள் செய்தும், வேண்டும் பொருள்களைத் தந்தும் பின்னாளில், இப்படி இருந்த நிலை எண்ணி வருந்தாமலும், ...

உணவே மருந்து! மருந்தே உணவு!

  உணவே மருந்து! மருந்தே உணவு!               ப ழங் காலத்தில் ஒவ்வொரு உணவுப் பொருளும் எந்த மாதிரியான குணமுடையது என்பதை வகுத்து வைத்திருந்தனர். அதன்படி , தன்னுடைய உடல்கூறுக்குத் தகுந்தபடியும் எந்த உணவை எந்தப் பருவத்தில் சாப்பிட வேண்டும் என்கிற வாழ்வியல் முறைகளைப் பகுத்தாய்ந்து சித்தவைத்திய நூல்களிலும் , பண்டைய இலக்கியங்களிலும் எழுதி வைத்துள்ளனர். கேழ்வரகு , சாமை , கொள்ளு , அவரைக்காய் ஆகிய இந்நான்கு ம் தமிழ்நாட்டின் பிரதான உணவு வகைகளாக இருந்ததாக புறநானூற்றுப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது. பழந்தமிழர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும் , பத்தியமாகவும் உண்டார்கள். இதனால் உணவே மருந்தாக அமைந்திருந்தது.  அவர்களுடைய சமையலறையில் மிளகு , சீரகம் , வெந்தயம் , மல்லி (தனியா) , மஞ்சள் போன்ற மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன. உணவுப்பொருள் வேகும்போது அதன் சத்துக்கள் இழக்காமல் இருப்பதற்கு மஞ்சள்பொடி உதவுகிறது. மேலும் அது குடல் புண்ணை ஆற்றுவதோடு , கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.         ...

சங்க இலக்கியங்களில் விழாக்கள்

  சங்க இலக்கியங்களில் விழாக்கள்                 மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும் , புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்கள். மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் முக்கிய நோக்கமாகும். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி , வீழ்ச்சி மறுமலர்ச்சி ஆகியவற்றை அச்சமுதாயம் காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடும் விழாக்களின் வழியாக அறியலாம் சங்க காலத்தில் விழாக்கள் சிற்றூரிலும் , பேரூரிலும் கொண்டாடப்பட்டதை இலக்கியங்கள் கூறுகின்றன. விழா மரபுகள்        விழாக்களை வளர்பிறை மற்றும் மதி நிறைந்த நாட்களில் தொடங்கியதை அகநானூறு கூறகிறது (அகம். , பா.எ. , 141.) விழாவில் காணப்படும் செயல்முறைகளை ஆற்றுவோரை விழாவாற்றுவோர் ; என்பர். வெறியாட்டில் வேலன் விழா ஆ ற்றுவோனாகச் சுட்டப்படுகிறான். சங்ககாலத்தில் குயவர்கள் விழாக்களில் முக்கியப் பங்கு வகித்தனர் ; என்பதை ,                ‘‘ மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி ...