Skip to main content

Posts

Showing posts from January, 2025

மானமுள்ள வாழ்வு

  மானமுள்ள வாழ்வு எவ்வளவு துன்பம் வந்தாலும் மானங்கெடாமல் வாழ வேண்டும். பசிப்பிணியால் சாவதாகயிருந்தாலும் தன்னை இழிவாக மதிப்பவர்களின் இல்லத்திலே உணவருந்தக் கூடாது. இதுவே தமிழர்களின் சிறந்த பண்பாடு. இந்த பண்பாட்டை நாலடியார் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன.           ”தன் உடம்பின்           ஊண் கெடிதும் உண்ணார்கைத்து உண்ணற்க” தன் உடம்பின் உள்ள சதை வற்றிப் போனாலும், உடம்பின் எலும்புத் தோலுமாக இளைத்துப் போனாலும், உண்ணத்தகாத பகைவர் கையிலிருந்து உணவு பெற்று உண்ணக் கூடாது.                   ”பொற்கலத்துப் பெய்த புலி உயிர் வான்புழுக்கல்                   அக்காரம், பாலோடு, அமரார் கைத்து உண்டலின்                 உப்புஇலிபுற்கை, உயிர்போல் கினைஞர்மாட்டு,         ...

எடிசன்

  எடிசன்           தாமஸ் ஆல்வா எடிசன் காது கேளாதவர். பல முறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவர் கவனம் முழுவதும் கண்டுபிடிக்க வேண்டிய பொருளின் மீதே இருந்தது. ஒரு நாள் நண்பர் ஒருவர், ”எடிசன் உங்களுக்கு காது கேட்கவில்லை. இந்தக் குறைபாடு உங்களை எந்த அளவு பாதித்துள்ளது? என்றார். அதற்கு அவர், ”எனக்கு காது கேட்கவில்லை என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. அது எனக்குப் பல வகையில் உதவியாக உள்ளது. நான் ஆராய்ச்சியின் மீதே என் மனதைச் செலுத்தும் போது யார் கூப்பிட்டாலும் எனக்குக் காது கேட்காது. என் எண்ணம் சிதறாமல் இருக்க அது உதவுகிறது” என்றார். பார்வை நூல் 1.   ப்ரியா பாலு – அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை, வானவில் புத்தகாலயம், சென்னை – 600 017.

தமிழக முத்துக்கள்

  தமிழக முத்துக்கள்           சிப்பி என்பது கடலில் வாழும் பிராணி. சிப்பிகளில் முத்துக்கள் உண்டாயின. முத்து அதிக விலை மதிப்புள்ளது. முத்து இரத்தினங்களில் ஒன்றாகும். ஆறுகள் கடலிலே கலக்கிற புகர் முகத்திலே பெரும்பாலும் முத்துச் சிப்பிகள் உண்டாயின. சிப்பிகளைப் போல் சங்குகளும் கடலில் உண்டாயின. இடம்புரிச் சங்குகளை விட வலம்புரிச் சங்குகள் அதிக விலை பெற்றது. நீரினுள் மூழ்கிப் பயின்றவர்கள் நீருள் மூழ்கிச் சிப்பிகளையும் சங்குகளையும் கரைக்கு மேல் கொண்டு வருவார்கள். கொண்டுவரப்பட்ட சிப்பிகளில் முத்துக்கள் கிடைத்தன. சங்குகளை வளைகளாக அறுத்து விற்றார்கள். சங்கு வளைகளை அக்காலத்து மகளிர் கைகளில் அணிந்தனர். வலம்புரி வளைகளைச் செல்வச் சீமாட்டிகளும் அரசிகளும் அணிந்தார்கள். செல்வரும் அரசரும் முத்துக்களை அணிந்தார்கள்.       கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட முதல் சிங்கள அரசனான விசயன், பாண்டிய அரசனுடைய மகளை மணம் செய்து முடிசூடி அரசாண்டான். அவன் பாண்டிய அரசனுக்கு ஆண்டுதோறும் இரண்டு நூறாயிரம் (இரண்டு இலட்சம்) பொன் மதிப்புள்ள முத்துக்களைச் செலுத்திக் கொண்டி...

புறநானூற்றுப் பெண்பாற் புலவர்களின் பாடல்களில் திணை – துறை பொருத்தம்

                                                       புறநானூற்றுப் பெண்பாற் புலவர்களின் பாடல்களில்                                              திணை – துறை பொருத்தம்             காட்சிப் பொருள் என்றும் கருத்துப் பொருள் என்றும் வகைப்படுத்தப்பெறும் உலகப் பொருள்கள் அனைத்தையும் பழந்தமிழ் சான்றோர் முதல் , கரு , உரி என மூன்றாகப் பகுத்து அவற்றை அகம் , புறம் என இருவகையாக வகுத்தனர் . இவற்றுள் அகம் என்பது ஒத்த அன்புடையோர் தாமேயன்றிப் பிறரால் உய்த்துணரப் படாததும் , இஃது இவ்வாறிருந்ததெனப் பிறருக்குக் கூறாமல் துய்த்தோர் தம் அகத்தே வைத்து மகிழ்வது என்பது பொருளாகும் .           ” ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற ...