Skip to main content

Posts

Showing posts from March, 2025

பெருந்தலைவர் காமராசர்

  பெருந்தலைவர் காமராசர்             காமராசர், தமிழகத்தின் முதலமைச்சராக 1954 – ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் பொறுப்பேற்றார். முதல்வரான பின்னும் முன்பிருந்த சென்னை திருமலைப் பிள்ளை வீதியில் இருந்த வாடகை வீட்டிலேயே தொடர்ந்து தங்கினார். காமராசரின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக இருந்தவருமான ரா. கிருஷ்ணசாமி நாயுடு ஒரு நாள் பெருந்தலைவரை அவருடைய வீட்டில் சந்தித்தபோது, ‘உங்கள் தாயார் விருதுநகரில் தனியாக வாழ விரும்பவில்லை. நீங்கள் அனுமதித்தால் உங்கள் வீட்டின் ஒரு மூலையில் எந்தச் சிரமமும் தராமல் எஞ்சிய காலத்தை உங்கள் முகத்தைப் பார்த்தபடி கழித்துவிடுவதாகக் கண்ணீர் ததும்பச் சொல்கிறார். அவரை அழைத்து வரலாமா? என்று கேட்டார்.           ‘எனக்கு மட்டும் தாயின் மீது பிரியம் இல்லையா? தந்தை இல்லாத பிள்ளையாய் எவ்வளவு துயரப்பட்டு என்னை அம்மா வளர்த்திருப்பார். பாசத்தில் அவரை நான் பக்கத்தில் வைத்துக் கொண்டால், அவரைப் பார்க்க அடிக்கடி பத்துப் பேர் வருவார்கள். ‘அத்தையைப் பார்க்க வந்த...

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கம், நூல் வெளியீட்டு விழா ...

         சேலம் மகிழம் தமிழ்ச் சங்கம்,  நூல் வெளியீட்டு விழா ... சேலம், ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(த) மற்றும் சேலம், மகிழம் தமிழ்ச் சங்கம், டுடே பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழ் இணைந்து   உலக தாய்மொழி தினம் 2025 – ஐ முன்னிட்டு நிகழ்த்தும் முப்பெரும் விழா – 2025 சேலம், ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ் முப்பெரும் விழாவில் விருது வழங்கும் விழா, பன்னாட்டுக் கருத்தரங்கம், ஆறாவது பல்துறை சார்ந்த மாபெரும் புத்தக வெளியீட்டு விழா என்று மூன்று விழாக்களும் ஒரே மேடையில் நிகழ்ந்தது. இவ்விழாவில் SPJ SING PTE LTD, Singapore Dr P.Nalini. அவர்களும், பேராசிரியர், தலைவர், சமூகவியல் துறை, தங்கவயல் சட்டக் கல்லூரி, கோலார் தங்க வயல், கருநாடக மாநிலம், முனைவர் பெ.கணேஷ் அவர்களும்,   விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.   இத்தகைய சிறந்த நூல் வெளியீட்டு விழாவில் என்னுடைய நூலான   தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலும் வெளியானது. ஆகையால் இன்றைய தினம் எனக்குச் சிறந்த நாளாக அமைந்தது. இந் நூலை சிறந்த முறையில் நூல...

தன்மானத் தலைவர் பெரியார்

  தன்மானத் தலைவர் பெரியார்           தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதன் விளைவு, என்னை அவரைப் பற்றிய நூல்களைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அதன் விளைவே இக்கட்டுரை. இக்கட்டுரை அவருடைய சுருக்கமான வரலாறாக அமைந்துள்ளது. அவரைப் பற்றி நாமும் தெரிந்து கொள்ளவேண்டும். எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்தப் பதிவு. தந்தைப் பெரியார் வாழ்க்கை வரலாறு         பெரியார் ஈரோட்டில் வெங்கட்ட நாய்க்கர் – சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாக 1879 – ஆம் ஆண்டு செப்டம்பர் 17 – ஆம் நாள் பிறந்தார் . பெரியாரின் தந்தை தொடக்கத்தில் ஏழ்மையில் உழன்றவர் . கூலி வேலை செய்தவர் . தாயார் சிறிய அளவில் மளிகைக் கடை வைத்தார் . அது இருவர் உழைப்பில் நாளடையில் பெரிய மண்டியாக மாறியது . பெரியார் பிறப்பதற்கு முன்பே அவருடைய தந்தை பெருவணிகராக உயர்ந்தார் . வீட்டில் செல்வம் பெருகியதோடு , கடவுள் பக்தியும் கரை புரண்டது . தன்னுடைய ஆறாவது வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட பெரியார் , கல்வியில் கவனம் செலுத்தவில்லை . நான்கா...

மனவேதனையில் சில வரிகள்!

  மனவேதனையில் சில வரிகள்!             உலகில் ஓர் அறிவு முதல் ஐந்தறிவு உயிர் வரை அனைத்து உயிர்களும் தன் உயிரையும் குட்டிகளையும் பாதுகாத்துக் கொள்ளப் போராடுகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம் இவ்வுலகில் தன் உயிரையும், தன் உடமைளையும், கற்பையும் காத்துக் கொள்ள ஒவ்வொரு நிமிடமும் போராடி வருகிறோம். நேற்று முகநூலில் இரண்டு வீடியோக்கள் பார்த்தேன். நேற்றிலிருந்து மிகவும் மனவேதனையில் இருக்கிறேன். எனக்கு பிற நாடுகளில் எவ்வாறு பெண்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு என்று தெரியவில்லை. ஆனால் நம் நாட்டில்?   கலக்கமாக உள்ளது. சமீப காலமே இச்சம்பவம் அதிகம் கேள்வி படுகிறோம்.           சங்க காலம் முதல் ஐரோப்பியர் காலம் வரை இலக்கிய வளர்ச்சியைப் பார்த்துள்ளோம். மொழிக் கலப்பிற்குக் கவலை கொண்டு மொழியைப் பாதுகாக்கத் தனித்தமிழ் இயக்கம் என்று நம் முன்னோர்கள் போராடினார்கள். ஆனால் நாம் நம்மை பாதுகாக்கவும், நம் கற்பைப் பாதுகாக்கவும்   போராடுகிறோம். குழந்தை முதல் கிழவி வரை அனைவருக்கும் ஒரே நிலை. வந்தாரை வாழ ...

பேரறிஞர் அண்ணா

  பேரறிஞர் அண்ணா             ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் முத்தான மூன்று மதிப்பீடுகளைத் தமிழகத்தில் வளர்த்தவர். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என மாற்றுக் கருத்தை ஊட்டியர். சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தியவர். தமிழகத்தில் காங்கிரசுக்கு மாற்றாக ஒரு மாநிலக் கட்சியை உருவாக்கி அதன் மூலம் சமூக விழிப்புணர்வைத் தட்டி எழுப்பியவர். முதல் மாநிலக் கட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி ஆட்சியைப் பிடித்துச் சரித்திரம் படைத்தவர் அறிஞர் அண்ணா.           அறிஞர் அண்ணா என்ற அண்ணாதுரை, காஞ்சிபுரத்தில் நடராசன் – பங்காரு இணையருக்கு மகனாக 1909 – ஆம் ஆண்டு செப்டம்பர் 15 – ம் நாள் பிறந்தார். இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கைப் பெற்று சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பத்திரிக்கைத் துறையில் ஆர்வம், அரசியல் ஈடுபாடு இவரை ‘அறியாப்புகழ்’ கொள்ள வைத்துவிட்டது. 1930 – ல் இராணியம்மாளைத் திருமணம் செய்து கொண்ட அண்ணா, டாக்ட...

பெண்ணே உன் வாழ்க்கை உன் கையில்!

  பெண்ணே உன் வாழ்க்கை உன் கையில் !           ஒளி – இருள் , பகல் – இரவு , மலை - மடு , ஆக்கம் – அழிவு , தோற்றம் – மறைவு , என்பன போன்ற இருமைகள் உலகை இயக்குகின்றன . உலகின் உயிரோட்டம் உயிரினங்களின் ஆண் – பெண் எனும் இருமையால் இயங்குகின்றது .           இவ்வுலகில் இயற்கையாகத் தோன்றிய து உலகம் , இயற்கை யாக தோன்றிய இவ்வுலகில், ஓர்  அறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிரினங்கள் இயற்கையின் போக்கில் சூழலுக்குக் கேற்ப வாழ்க்கை யை நடத்து கிறது . அவ்வுயிர்களினால் இந்த உலகம் மாற்றம் அடையாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இருந்தது.      ஆனால் மனித உயிர்களாகிய நாம் இயற்கையா க உருவான இவ்வுலகத்தையும் , ஆண் – பெண் என்று சரிநிகர் சமமா க வாழாமல், ஆணுக்குப் பெண் அடிமை , பெண்ணுக்கு ஆண் அடிமை என்றும் ஆண் தான் மூலதனம் என்று ம் நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர். ஆணுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்கள் ஆண்கள் வழி வாழவேண்டும் என்றும் மாற்றி விட்டோம். இம்மாற்றம்  மனித சமூகத்தைத் தவிர எந்த உயிரின...

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி

  கப்பலோட்டிய தமிழர் வ . உ . சி           உலகநாதம் பிள்ளைக்கும் , பரமாயி அம்மைக்கும் 1872 – ஆம் ஆண்டு செப்டம்பர் 5 – ஆம் நாள் ஒட்டப்பிடாரத்தில் மகனாக அவதரித்தார் வ . உ . சிதம்பரம் . ஆங்கிலம் கற்க அந்த ஊரில் பள்ளி இல்லை என்பதனால் , வ . உ . சி . படிப்பதற்காக ஓர் ஆங்கிலப் பள்ளியையே புதிதாக உருவாக்கினார் உலகநாதம் பிள்ளை . பாட்டனார் , பெரிய தந்தை , தந்தையைப் போல் தானும் ஒரு வழக்கறிஞராக உயர்ந்தார் . பாதிக்கப்பட்டவர்களுக்கு வாதிடுவதையே தன் கடமையாகக் கொண்ட சிதம்பரம் , காவல் துறை அதிகாரிகளின் கடுங்கோபத்திற்கு ஆளானார் . ‘ சப் - மாஜிஸ்திரேட் ஏகாம்பரம் என்பவர் லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடுத்துத் தண்டனையைப் பெற்றுத் தந்த இவர் அதிகார வர்க்கம் பரம எதிரியாகப் பாவித்தது .           சிதம்பரம் பிள்ளைக்கு 23 வயதில் திருமணம் நடந்தது . தமிழ் புலமைமிக்க வள்ளியம்மையின் கரம் பற்றினார் . ஆறாண்டுகள் இனிய இல்லறம் நடந்தது . பின் வள்ளியம்மை இறந்துவிட்டார் . பின் மீனாட்சியை மறுமணம் செய்து கொண்டார் .     ...