இலுப்பை ‘இலுப்பை’ மரத்தைச் சங்க காலத்தில் ‘இருப்பை’ என்றழைத்தனர். ஊர்ப்புறங்களில் எண்ணெய் எடுப்பதற்காகத் தோப்பாக வளர்க்கப்படுவதுண்டு. கோயில்களில் விளக்கெரிக்க இதன் எண்ணெய் பயன்படுகிறது. இயற்கையில் இலுப்பை மரம் தென்னிந்தியக் காடுகளில் காணப்படுகிறது. வடஇந்தியாவிலும் கேரளத்திலும் மரம் சிறிது வேறுபட்டது. இலுப்பை மரங்களைச் சங்க நூல்களில், ”நீடுநிலை யரைய செங்குழை யிருப்பை” (அகம்.331) ”குதிர்க்கா லிருப்பைக் குவிகுலைக் கழன்ற” (அகம்.321) ”கருங்கோட் டிருப்பை பூவுறைக் குந்து” (புறம்,384) ”கருங்கோட் டிருப்பை வெண்பூ முனையிற்” (அகம்,247) இலுப்பை மரம் உயரமாக வளரும் என்பதையே ‘நீடு நிலையரைய’ என்ற அகநானூறு குறிக்கின்றது. இலுப்பை மரத்தின் அடிமரம் பெருத்துக் காண்பதால் ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!