மங்கையர் பருவம் என்பது செல்லப் பருவம் தாண்டி, அறிவு வளர்ந்த மங்கைப் பருவம் . இனியும் குழந்தையல்ல . அனைத்துக் குணநலன்களையும் கொண்டு Maturity அடைந்து வாழ வேண்டும் . பொறுப்பு . கடமை , உரிமை இவைகளை உணர்த்தும் விதமாக இச்சடங்குகள் செய்யப்படுகின்றன . தாய்மாமன் மூலம் இக்கௌரவம் வழங்கப்படுவதாக அமைகிறது . மஞ்சள் (Antiseptic), வேப்பிலையைப் போட்டு ஊறவைத்து அந்நீரால் குளிக்க வைப்பார்கள் . இலைகள் தலையில் விழாத வகையில் , ஆரோக்கியத்திற்கேற்ப செம்பு சல்லடை வைத்து அதன்வழி ஊற்றுவார்கள் . முதன்முதலில் ஊற்றும்போது அதில் நவமணிகளால் ஆன நகைகள் , தங்கம் , வெள்ளி என மருத்துவ குணங்கள் நிறைந்த நகைகளில் படுமாறு நீர் ஊற்றுவார்கள் . இதனை மஞ்சள் நீராட்டு விழா என்பர் . மேலும் உடலில் உள்ள மாறுதல்களின் விளைவைச் சமன் செய்ய புரதச்சத்து உணவுவகைகளைக் கொடுப்பார்கள் . காலையில் வெறும் வயிற்றில் முட்டை , நல்லெண்ணெய் , கொடுப்பார்கள் . உழுத்தங்களி . சிவப்பு புட்டரிசி , பருப்பு ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!