சிந்திக்காததால் கேடு ‘நாத்திகன்’ என்றால் ஞானி. அறிவாளி என்றுதான் பெயர். கடவுள் இல்லை என்பவர் என்பது பொருள் அல்ல. ஞானி என்றால் முனிவர் என்பது அல்ல – ஞானம் உடையவன்; அறிவு உடையவன் என்பது பொருள். எவன் ஒருவன் அறிவை உபயோகப் படுத்துகிறானோ – எவன் ஒருவன் அறிவு கொண்டு எதையும் விவகாரம் பண்ணுகிறானோ அவன் நாத்திகன் என்று கூறப்படுகிறான். ‘ஆத்திகன்’ என்றால் அறிவில் நம்பிக்கை வைக்காமல் – சாஸ்திரம், புராணங்கள் முதலியவைகளை அப்படியே ஒப்புக் கொண்டு, ஆராயாமல் நடப்பவன் என்று பொருள். தோழர்களே! இராமாயணத்திலேயே ஓர் இடத்தில் நாத்திகனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கின்றானோ அவன் நாத்திகன்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்படி அறிவில் நம்பிக்கை வைத்து நடக்க வேண்டும் என்று சொன்னவர்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டே இருக்கின்றனர். அதன் காரணமாகவே இந்தத் துறையில் இறங்கிப் பாடுபட முன்வருவதில்லை. ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!