Skip to main content

Posts

Showing posts from September, 2024

விவசாயத்திற்குப் பயன்படும் பொருட்கள்

  விவசாயத்திற்குப் பயன்படும் பொருட்கள்                         ” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்           தொழுதுண்டு பின்செல்பவர் ” ( குறள் -1033) என்று உழவின் மேன்மையைத் திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார் . அவ்வகையில் விவசாயம் என்பது குறைந்துவரும் தொழிலாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றது . விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறி வருகின்றன . நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் மனிதன் உணவின்றி வாழமுடியாது . நம் முன்னோர்கள் காலை எழுந்தவுடன் உடல் உழைப்பால் விவசாயம் செய்து வந்தார்கள் . அத்தகைய சிறப்பு மிகுந்த விவசாயத்திற்கு விவசாயிகள் பயன்படுத்திய பொருட்கள் குறித்து நினைவுக் கூறும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது . ஏர்           ஏர் என்பது வயல்களை உழுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவியாகும் . இது மரத்தால் செய்யப்பட்டது . இது பெரும்பாலும் நுனாமரம் என்னும் ஓதியன் மரத்தினால் செய்வர் ...

பிரத்யங்கரா தேவி

  பிரத்யங்கரா தேவி           பிரகலாதனுக்கு தந்தை இரணிய கசிபு எனும் அரக்கன். அவன் தன்னையே எல்லாரும் வணங்க வேண்டும் என்று துன்புறுத்தினான். வேறு தெய்வத்தை வணங்குபவர்களை சிரசேதம் செய்வான். அவன் மகனான பிரகலாதன் எப்போதும் ‘ஹரி ஓம்’ என்று மகா விஷ்ணுவை வணங்குவான். இது இரணியனுக்கு பிடிக்காததலால் தன் பிள்ளையையே கொல்லத் துணிந்தான். ஆனால் அவனை கொல்ல முடியவில்லை.           இரணியன் ஆண், பெண், தேவர்கள், மூவுலகம், (தரை, ஆகாயம், தண்ணீர்) சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகர், காளி போன்ற எல்லா தேவதைகள் யாராலும் எதனாலும் கொல்லப்படக் கூடாது என்ற வரத்தைப் பெற்றவன். அதனால் யாராலும் தன்னைக் கொல்ல முடியாது என்ற மமதையால் எல்லாரையும் தன்னை தெய்வமாக வணங்கச் செய்தான்.         ஒருநாள் – தன்மகன் எதிரில் வந்தபோது அவனை ‘நீ யாரை வணங்குகிறாய?’ என்றான். நான் ‘ஹரியைத்தான் வணங்குகிறேன்’ என்றான். அப்படியா? அந்த ஹரி எங்கும் நிறைந்தவரா? என்றான்.       ...

யுகாதி பண்டிகை

  யுகாதி பண்டிகை          யுகாதி பண்டிகை என்பது ஆந்திர நாட்டில் கொண்டாடப்படும் வருடப்பிறப்பு விசேஷ நாளாகும். அன்று புதுயுகம் துவங்குவதால் யுகாதி பண்டிகை எனப் பெயர் வந்தது. அன்று எல்லோரும் புத்தாடை அணிந்து, தெய்வத்திற்குப் பலகாரங்கள் படைத்துக் கொண்டாடுவார்கள்.  மாமிச உணவும் அன்று விசேஷமாக செய்து சாப்பிடுவார்கள். தானங்கள் செய்வார்கள். கோயில் சென்று தெய்வத்தை வணங்கி வருடம் பூராவும் நன்றாக, செழிப்பாக இருக்க வேண்டிக் கொள்வார்கள். பார்வை நூல் 1. இந்திய நாட்டின் பண்டிகைகள், தேஜஸ்ஸ்ரீ, இந்திய நாட்டின் பண்டிகைகள், ஐந்திணை பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.

மிலாது நபி

  மிலாது நபி           நபிகள் நாயகம் பிறந்த நாளைத்தான் மிலாது நபி என்று முகம்மதியர்கள் கொண்டாடுவார்கள். மிலாது நபி பண்டிகையன்று பள்ளிவாசலில் சிறப்புப் பண்டிகையன்று பள்ளிவாசலில் சிறப்புப் பிரார்த்தனை செய்வார்கள். ஏழைகளுக்கு லுங்கி மற்றும் ஆடைகள் வழங்குவார்கள். இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் ஆள் வைத்து பிரியாணி செய்து ஏழைகளுக்கு வழங்குவார்கள். அன்று மாலை ஊர்வலமாக சென்று சிறப்புப் பிரார்த்தனையும், நபிகள் நாயகம் சொன்ன, ‘நாம் எல்லாரும் சகோதரர்கள், எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்பது போன்ற நல்ல கருத்துக்களை கூட்டத்தில் சொல்லி அதன்படி எல்லாரும் இருக்க வலியுறுத்துவார்கள். பார்வை நூல் 1. இந்திய நாட்டின் பண்டிகைகள், தேஜஸ்ஸ்ரீ, இந்திய நாட்டின் பண்டிகைகள், ஐந்திணை பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.

புறநானூற்றில் பெண்பாற் புலவர்களின் புலமைத்திறன்

  புறநானூற்றில் பெண்பாற் புலவர்களின் புலமைத்திறன்             ‘ மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ’ என்ற கவிமணியின் கூற்றை நிரூபிக்கும் வகையில் புறநானூற்றில் 15 பெண்பாற் புலவர்கள் பாடியுள்ளனர் . அவர்கள் ஔவையார் , அள்ளூர் நன்முல்லையார் , ஒக்கூர் மாசாத்தியார் , காக்கைப் பாடினியார் , நச்செள்ளையார் , காவற்பெண்டு , குறமகள் இளவெயினி , தாயங் கண்ணியார் , பாரிமகளிர் , பூங்கண் உத்திரையார் , பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு , பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் , பேய்மகள் இளவெயினி , மாற்பித்தியார் , மாறோக்கத்து நப்பசலையார் , வெண்ணிக்குயத்தியார் போன்ற பெண்பாற் புலவர்கள்   பாடல்கள் இயற்றியுள்ளனர் . தாய்மைக்கும் , பெண்மைக்கும் மதிப்பளித்து போற்றியது பண்டைய தமிழகம் . சங்க காலத்தில் மன்னர் குலம் முதல் குறவர் குலம் வரை எல்லாச் சமுதாயத்தினரிடையேயும் பெண்கள் கவிபாடும் அளவுக்குக் கல்விச் செல்வம் ஓங்கியிருந்தது என்பதையும் , கற்றோருக்குச் சாதி வேறுபாடின்றி அரசவையில் மதிப்பிருந்தது என்பதையும் புறநானூற்றுப் பாடல்கள்...