Skip to main content

Posts

Showing posts from June, 2023

‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்’

  ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்’           ஆறுகளில் வற்றாத ஜீவ நதிகளும் உண்டு. கோடையில் மிகுந்த வெப்பத்தால் நீர் வரண்டு மணல் திட்டுக்களாக காணப்பெறும் ஆறுகளும் உண்டு.           மண் திட்டு – அதாவது குதிர் என்பதற்கு குன்று, திடல் என்பது பொருள். இப்போது மணல் குன்றானது மழை பொய்த்த காலங்களிலோ, கோடையிலோ வரண்டிருக்கும் போது சில ஆறுகளில் இவ்வாறு மணல் குன்றுகள் ஆங்காங்கே நீரினூடே காணக் கிடைக்கும். இப்படிப்பட்ட மண் குதிரை மணல் குன்றை நம்பி தைரியமாக இறங்கி நடப்போமானால் திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கும்போது நீர் ஆழம் நம்மைத் திணற அடிக்கும். எனவே இத்தகைய மணல் குன்றை நம்பி இறங்கித் துன்பப்படக் கூடாது என அறிவுறுத்த இயற்கையின் யதார்த்தத்தைப் புரிய வைத்த மொழியே ‘மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்’ என்பது! பார்வை நூல் 1.    மாணவர்களுக்கான பழமொழி கட்டுரைகள் – ஹேமா ராமானுஜம் , பாவை பப்ளிகேஷன்ஸ் , சென்னை - 14.           ...

”சொரிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து போடாத சாப்பாடும் வீண்”

”சொரிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து போடாத சாப்பாடும் வீண்”   நம் நாட்டில் பழமையின் பெருமையும், புதுமையில் பொலிவும் கொண்டு வளமான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். நம் கலாச்சாரமும், பண்பாடும் இணைந்து பிறநாட்டிற்கு முன்னோடியாக வாழ்ந்து வருகின்றோம். ‘சனிநீர் ஆடு’ என்னும் ஔவையின் ஆத்திசூடியின் அமுதமொழிக்குச் சனி- என்றால் சீதளம் – குளிர்ந்த நீரில் நீராடு என்பதே உண்மை பொருள். இன்று எண்ணெய்க்குளியல் என்பதை மறந்து நாகரீகத்தின் உச்சியில் தலைமுடிக்கு ஷாம்பூ குளியல் தான் குளிக்கின்றோம். இதனால் பக்கவிளைவுகள் அறிந்தும், தவிர்க்க முடியாமல் மேனாட்டு நாகரீக மோகத்தில் யாரும் பழமையான முறையைப் பின்பற்றுவதில்லை. செவ்வாய், வெள்ளி பெண்களும், புதன், சனி ஆண்களும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இன்றும் சில கிராமப்புறங்களில் பின்பற்றி வருகின்றனர். உடல் ஆரோக்கியத்திற்கும், உழைப்புக்கும் ஏற்ற நல்ல உடற்பயிற்சியாக அமையும். நன்கு தலையில் சொரிந்து தேய்க்கும்பொழுது தலைமுடியின் வேர்ப்பகுதி வரை அழுந்தத் தேய்ப்பதால் உடல் சூடு தணிகிறது. எண்ணெய் பசையுடன் இருப்பதால் முடி எளிதில் கொட்டாது. புத்துணர்ச்சி ஏற்படுகிற...

மணமற்ற மலர்

மணமற்ற மலர்         நல் திறமை கொண்டு பல நூல்களைக் கற்றறிந்தும் அடுத்தவர்களுக்குக் கற்றுத்தராமல் இருக்கும் மக்களைப்          ”இணரூழ்த்தும் நாறா மலர்அனையர் கற்ற          துணர விரித்துரையா தார்” பற்றி இவ்வாறு கூறுகின்றார் . கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும் பூக்கள் மணமில்லாமல் இருந்தால் பயனழிதல் போலத் தாம் கற்றக் கல்வியை அடுத்தவர்களுக்குப் பயன்படுத்தாதவர்கள் பயனற்றவர் ஆவார்கள் என்பது இக்குறளின் பொருளாகும். ஒரு மலரைக் காணும் போது அதன் அழகையும், இதழ்களையும், நிறத்தையும், கண்டு ஆனந்தமடைகின்றோம். ஆயினும் ஒரு மலரின் நலம் அதன் மணமேயாகும். மணமற்ற மலர் மாண்புடையதாகக் கொள்ளப்பட மாட்டாது. அதுபோல், பல நூல்களையும் கற்றுணர்ந்த நல்லாரைக் காண்பது நன்றேயாகும். கல்வி அழகைத் தம்மிடத்தில் கொண்டு விளங்குதலால் அவரைக் காண்பது மனதிற்குப் பெரிதும் மகிழ்ச்சி தருகின்றது. ஆனால் தாம் கற்ற கல்வியைப் பிறருக்கு எடுத்து சொல்ல இயலாத விடத்து, அவர் கல்வி மணமற்ற மலர் போல் பயனற்றதாகும். இக்கருத்தைப் பிற்...

‘இளைய சமுதாயம் இனிமையாக வாழ’

  ‘இளைய சமுதாயம் இனிமையாக வாழ’    ”உண்மையான நாகரிகத்தின் சின்னம் விஞ்ஞான வளர்ச்சியிலோ, மக்களின் நடை உடை பாவனைகளிளோ அன்று. மக்களின் ஒழுக்கமும் நேர்மையுமே ஒரு தேசத்தின் நாகரிகத்தை எடுத்துக் காட்டக் கூடிய சின்னங்களாகும்” – எமர்ஸன் நம் நாட்டின் முன்னேற்றம் என்பது இன்றைய இளைய தலைமுறையினரின் கையில் உள்ளது.  நாகரிகம், ஸ்டைல் என்ற பெயரில் தன்னுடைய நடை, உடை, பாவனைகள், தலை முடியை விதவிதமாக வெட்டிக் கொள்தல் என்று தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல்  தங்களுக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு பெரியோர்களை மதித்து வாழவேண்டும். நம் முன்னோர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து தாத்தா, பாட்டி என்று அனைத்து உறவுகளுடனும்   பிள்ளைகளைக் கண்டிப்புடனும், அடுத்தவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளையும் எடுத்துக் கூறி வளர்ப்பார்கள். தற்பொழுது அந்த நிலை குறைந்து விட்டது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையும் குறைந்து விட்டது. நாட்டின் எதிர்கால தூண்களான மாணவச் சமுதாயம் சிறப்புடனும், நல் சிந்தனையோடும், நற்குணங்களுடனும் வாழவேண்டும்.  இளையோர்கள்  வாழ்வில் பின்பற்ற வேண்டிய பண்புகள் ...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...

பாலை

  பாலை              பாலை என்பது முல்லையும் குறிஞ்சியும் திரிந்த வடிவம் என்று கூறுவர் . இருப்பினும் வறட்சியான நிலத்தையும் பாலை என்று கூறும் வழக்கும் உண்டு . அத்தம் , சுரம் என்று பாலை நிலத்தை வழங்குவர் . மழையற்ற வறட்சியான பாலை நிலத்துக்கு உரியதாகப் பாலை மரம் சங்க காலத்தில் வழங்கப்பட்டது .           ” பாலை நின்ற பாலை நெடுவழி ” ( சிறுபாண் , வரி 11) என்று கூறப்பட்டிருக்கின்றது . பாலை என்ற மரம் இருந்தது என்பது தெரியவருகின்றது . பாலையைப் பற்றிச் சங்கநூலான நற்றிணைப் பாடலில் ,             ” உள்ளுதொறு நகுவேன் றேழி வள்ளுகிர்ப்            பிடிவிளந் திட்ட நாரில்வெண் கோட்டுக்           கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலைச்           செல்ல ( ளி ) தூக்கலி னிலைதீர் நெற்றங்       ...

இலக்கியங்களில் - ‘இலை’

  இலக்கியங்களில் - ‘இலை’             இலைகளில் உருவம், மென்மை, ஓரம், நிறம் முதலிய நிலையைச் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. புன்னை புன்னை மரத்தின் இலை அழகாகவும், மென்மையாகவும் இருப்பதை,           ”பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொன்முறி” (நற் ,9) நற்றிணை பாடல்வழி அறியலாம். புன்கை ‘Pongamia Glabra’ என்று ஆங்கிலத்தில் அழைப்பர். ’Glabra’ என்பதற்குப் பொருள் வழவழப்பான தன்மை என்பதாகும். ‘Pongamia’ எனும் சொல்லே தமிழ்ச் சொல் ‘புன்கனின்’ மறு உருவமாகும்.           புன்னையின் இலை கரும்பச்சை நிறமுடன் பளபளப்புடன் பார்ப்பதற்கு அழகுடன் காணப்படும். இதை இலத்தீனில் ‘Calophyllum Inophyllum’ என்று அழைப்பர். ‘Calophyllum’ என்பதற்கு அழகிய இலை என்று பொருள். இதன் அழகை உணர்ந்து நற்றிணையில்,           ”நீலத் தன்ன பாசிலை யகந்தொறும்” (நற், 249)         ”மின்னிலைப் பொலிந்த விள...

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

புறநானூறு காட்டும் பழந்தமிழர் தொழில்நுட்பம்

  புறநானூறு காட்டும் பழந்தமிழர் தொழில்நுட்பம்           நாட்டின் வளமைக்கும் , வளர்ச்சிக்கும் தொழில்நுட்ப உத்திகளைக் கையாள்வது அடிப்படையாக அமைகிறது . மனிதனின் அடிப்படைத் தேவைகள் விரிவடையும் ஒவ்வொரு காலத்திலும் நிறைவு செய்யப் புதிய வழிமுறைகளைக் கையாளவும் , புதுப்புதுக் கருவிகளைக் கண்டுபிடிக்கவும் முற்படுகிறான் . அத்தேவைகளின் நிரந்தரத் தன்மைக்கும் வேலைப் பளுக்குறைப்பு மற்றும் கால மேலாண்மைக்கும் புதிய நுட்பங்களைக் கையாள வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படுகிறது .           புறநானூறு காட்டும் பழந்தமிழ் தொழில் நுட்பமானது அடிப்படைத் தேவைகளின் தன்னிறைவிற்குத் துணையாக , ·         வேளாண் தொழில் நுட்பம் ·         நெசவுத் தொழில் நுட்பம் ·         கட்டுமானத் தொழில் நுட்பம் ·         உலோகத் தொழில் நுட்பம் ·         எந்திரத் தொழி...