Skip to main content

Posts

Showing posts from April, 2024

பாபா சாகேப் அம்பேத்கார் அவர்களின் பொன்மொழிகள்

  பாபா சாகேப் அம்பேத்கார் அவர்களின் பொன்மொழிகள்         அணைகளை உருவாக்கியது முதல் இந்திய ரூபாயின் பிரச்சனைகளை ஆராய்ந்தது வரை அம்பேத்காருக்குப் பல முகங்கள் இருந்தாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர்.         இந்தியாவில் நிலவி வந்த சாதீயக் கொடுமைகளுக்கு எதிராகப் தனது இறுதி மூச்சு வரைப் போராடியவர் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் ஆவார். அவர் சட்ட மாமேதை மட்டுமல்ல. அரசியல் வித்தகர், பொருளாதார மாமேதை, தத்துவ ஞானி, சட்ட வல்லுநர், தலைசிறந்த எழுத்தாளர்,   சமூக நீதிச் சிந்தனையாளர் மற்றும் புரட்சியாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட மாமேதை எனலாம். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, பிரெஞ்சு, பெர்ஷியன், ஜெர்மன், பாலி எனப் பல மொழிகளும் கற்றறிந்த வித்தகர்.           கல்வியே ஒருவருக்கு மதிப்பையும் வளத்தையும் அளிக்கும் என்று உறுதியாக அம்பேத்கர் கொண்ட எண்ணமே, ஒன்பது வெளிநாட்டு, பன்னிரண்டு இந்திய பட்டங்களை அவர் பெறக் காரணமாக இருந்தது. ·  ...

தமிழ் இலக்கியங்களில் மழை நீரின் முக்கியத்துவம்

  தமிழ் இலக்கியங்களில் மழை நீரின் முக்கியத்துவம்           தமிழ் நாட்டின் இயற்கை அமைப்புப் பெரும்பாலும் மழை நீரினை நம்பி உள்ளது . மழை நீர் இல்லையேல் இயற்கை வளம் இல்லை . உயிர்களும் இல்லை . தமிழ் இலக்கியங்கள் மழைநீரின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து உணர்த்தி வருகின்றன . நீரின் சிறப்பையும் வானத்தில் இருந்து பெய்யும் மழையின் இயக்கத்தையும் முல்லைப்பாட்டில் ,                  ” நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு                   வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை                 நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்                 பாடிமிழ் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு                 கோடு கொண்டெழுந்த கொடுஞ்ச...

தன்னலமற்ற அன்பு

  தன்னலமற்ற அன்பு           அன்புக்கும் தன்னலத்திற்கும் தொடர்பு உண்டு. அன்பு குறையக் குறைய தன்னலம் பெருகும். அன்பு பெருகப் பெருகத் தன்னலம் தேயும். தன்னலமற்றவர்கள் தம் உயிர் வாழ்க்கைக்குக் காரணமான உடம்பில் உள்ள எலும்பும் பிறர் நன்மைக்காக இருப்பதாகவே கருதுவார்கள். இவர்கள் ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற கொள்கைகளைக் கடைபிடிப்பவர்கள்.           ”அன்பிலார் எல்லாம் தமக்குரியவர் அன்புடையார்              என்பும் உரியர் பிறர்க்கு” (குறள், 72) என்பது வள்ளுவம்.           பற்றற்ற வாழ்க்கைப் பண்புக்கு வாழை மரத்தைச் சிறந்த சான்றாகக் கொள்ளலாம். வாழைமரம் குலை விடுகின்றவரை வாழ்கின்றது. பின்பு வீழ்கின்றது. அஃது அடுக்கடுக்காய் இலை விட்டு வளர்ந்து வருகின்றது. அந்த நோக்கம் நிறைவேறியவுடன் தன் கடமை தீர்ந்ததாகவும் தான் தோன்றி வளர்ந்த முயற்சி வெற்றியுற்றதாகவும் துணிந்து தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்ற...

நீர் வளமும், நிலவளமும்

    நீர் வளமும், நிலவளமும்           உலக மக்களின் அடிப்படைத் தேவைகளில் நீர் வளமும், உணவுப் பொருள்களை உற்பத்தி செய்திடும் நிலவளமும் முக்கியமானது. நீரின் மிகையினை வீணாக்காமற் பாதுகாத்து உரிய காலத்தில் நிலப் பகுதிகளுக்கு அளிக்கும் போது நிலம் செழிக்கின்றது. மக்களும் செழிக்கின்றனர். ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு எய்த முடியும். சங்க இலக்கியத்தில் குடபுலவியனார் புறநானூற்றுப் பாடலில் நீர் வளத்தையும், நிலவளத்தையும் இணைத்துக் கூறுகின்றார்.           நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்         உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே         உண்டி முதற்றே உணவின் பிண்டம்         உணவெனப்படுவது நிலத்தோடு நீரே         நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு         உடம்பும் உயிரும் படைத்திசினோரே” (புறம்,18) என்று மனித உடலுக்கு உயி...