பாண்டவர்கள் சூரிய பகவான் குந்தி தேவியிடம் கூறியதைப் போல அவள் மீண்டும் கன்னிப் பெண்ணாகத் திகழ்ந்தாள். அவளை மணந்து கொள்ள பல அரசகுமாரர்கள் போட்டியிட்டார்கள். பின்னர், சுயம்வர முறைப்படி குந்திதேவி பாண்டுராஜனை மலர் மாலை சூடி தன் கணவனாகத் தேர்ந்தெடுத்தாள். மணமக்கள் அஸ்தினாபுரம் சென்றடைந்து சிறந்த முறையில் வாழ்ந்து வந்தார்கள். இவ்விதமிருக்க, பாண்டு மகாராஜா ”மாத்ரி” என்ற இளவரசியை மணந்து கொண்டார். பாண்டு மன்னன் வேட்டையாடுவதில் அதிக ஆர்வமுள்ளவன். அங்கே ஒரு ஆண்மானும் பெண்மானும் காதல் விளையாட்டில் ஈடுபட்டு விளையாடி கொண்டிருந்தன. அந்த மான்களின் மீதுகுறிவைத்து அம்பு எய்தவும் ஆண்மான் மீது அம்பு பட்டது. ஆண்மானின் உருவம் மறைந்து அதிலிருந்து முனிவரின் உருவம் வெளிப்பட்டது. பின்னர் பெண்மானின் உருவம் மறைந்து அதிலிருந்து முனிவரின் மனைவி வெளிப்பட்டாள். அம்பு தைத்த வலி பொற...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!