வாழ்க்கையே ஒரு வழிபாடு – வெ . இறையன்பு ( புத்தக மதிப்புரை ) புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையே ஒரு வழிபாடு ’ என்ற புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல் ஆறாம் பதிப்பாக 2011 - ஆம் ஆண்டு , விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 1 96, விலை 1 00 ரூபாய். வெ . இறையன்பு அவர்கள் பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார் . பேச்சாளராகப் பரிணமித்தார் . பரிசாகக் கிடைத்த நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன . கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘ பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் . அமுதசுரபி , ஆனந்தவிகடன் , இதயம் பேசுகிறது , தாமரை , கணையாழி , புதிய பார்வை , தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை , கவிதை , கட்டுரைகளை எழுதியுள்ளார் . முதல் நாவல் ‘ ஆத்தங்கரை ஓரம் ‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது . நர்மதா அணை கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல் . இறை...
கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர். கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...