சந்திரசேகரமூர்த்தி தக்கனின் சாபத்தால் சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றும் தேய்ந்து வந்தன. ஒளியும் சிறப்பும் இழந்து வருந்தி நின்றான். சிவபெருமானிடம் சென்று தன்னைக் காத்தருள வேண்டினான். அடைக்கலம் வேண்டிவந்த சந்திரன் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான். தன் காலில் வீழ்ந்த வணங்கிய சந்திரனை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டார். மேலும் தன்னை வணங்குகின்றவர்கள் எல்லாம் சந்திரனையும் வணங்கும்படி செய்துவிட்டார். இத்திருக் கோலமே ‘சந்திரசேகரமூர்த்தி’ ஆகும். இதனை, ”குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குளிர்த்தான் வினை பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தாடை இறைவன் எங்கள் பெருமான் இடம்போல் இடும்பை தனுள் மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே” (திருஞானசம்பந்தர்) தவறு செய்தவர்கள் மனம் திருந்த...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!