Skip to main content

Posts

Showing posts from February, 2024

கற்றல் நன்றே! கற்றல் நன்றே!

  கற்றல் நன்றே! கற்றல் நன்றே!   புறநானூறு, பாடல் எண் -183 பாடியவர் – பாண்டியன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் மேன்மை குறித்துப் பாடிய பாடல். துறை – பொதுவியல்    மூத்தோன் அரசு கட்டில் ஏறுதல் என்ற முறைமையை நீக்கி அறிவுடையவனுக்குத்தான் அத்தகுதி உண்டு என்று குறிப்பிடப் பெற்றிருப்பதைக் காணலாம்.          ”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்              பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே         பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்         சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்         ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்             மூத்தோன் வருக என்னாது அவருள்         அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்         வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்   ...

ஆரோக்கியமாக வாழவேண்டுமா?

  ஆரோக்கியமாக வாழவேண்டுமா?           தமிழகத்தில் பரவலான உணவு என்று கணக்கு எடுத்தால் இட்லி, தோசை, பொங்கல், சோறு, சாம்பார், பொரியல், கூட்டு, ரசம், தயிர் இன்னும் தாராளமாகக் கணக்குப் போட்டால் அப்பம்,   அடை, வடை, புட்டு, ரவை உப்புமா, சப்பாத்தி. அசைவம் உண்பவர்களுக்கு முட்டை, கோழி, ஆட்டுக்கறி, மீன் இவையாவும் அவசியமானவை. ஆனா இவை மட்டும் போதுமானவை அல்ல. அதிலும் இவற்றை உணவாக மாற்றுவதும் அதனுடன் சேர்மானங்களும் அதில் இருக்கும் சத்துக்களையும் அழிப்பதாக இருக்கின்றன. அவை மூலப்பொருள்களாக வரும்போதே ஜீவசத்துக்களை இழந்து வருகின்றன. நடக்க முடியாத, நடக்க விடாத பிராய்லர் கோழியைச் சாப்பிட்டு எவ்வாறு மனிதன் நாலுபடி ஏறி இறங்க முடியும்.           ஜீவசத்துக்கள் இழந்த உணவு உடலுக்குள் ஏற்கப்படும் போது இரட்டைச் சிக்கல் உருவாகிறது. ஒன்று உணவுக்காகக் காத்திருந்த உடல் தனக்கான சத்துக்கள் இன்றி ஏமாற்றம் அடைகிறது. இரண்டு இந்தக் குப்பைகளை அரைத்துச் செரித்து வெளித்தள்ள வேண்டிய மகத்தான பணியையும் எந்தக் கூலியும் இன்றி நிறைவ...

கொள்ளு

  கொள்ளு           கொள்ளுப் பயறு வீரியமான பயிறு வகையாகும். ‘இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்குக் கொள்ளு’ என்பது பழமொழி. ஆங்கிலத்தில் கொள்ளைக் (Horse gram) குதிரைப் பயிறு என்று சொல்கிறார்கள். விலங்கில் அதிக வீரியமானது குதிரை. அந்தக் குதிரையே கொள்ளு சாப்பிட்டால் அத்தனை பலன் கிடைக்கும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் கொள்ளு சாப்பிட வேண்டும். இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. சளி வந்து மருத்துவம் பார்த்தால் ஒரே வாரத்திலும் பார்க்காவிட்டால் ஏழு நாளிலும் போய் விடும் என்பார்கள். எப்படி என்றாலும் சளி விடாது என்பது அவர்கள் கொள்கை. கொள்ளு ரசம் சளி தொந்தரவு உள்ளவர்களும், நோய் இல்லாதவர்களும் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடல் எடை குறைந்து காற்றில் பறப்பது போல இருக்கும். யவனம் காக்கும். கரிசல் காடு, கொங்கு மண்டலம், தென் கர்நாடகத்தில் கொள்ளு பாரம்பரிய உணவு. குறிப்பாக விவசாய குடும்பத்தில் தவிர்க்க முடியாத உணவு. கரிசல் காட்டில் விளைந்த கொள்ளுக்கு வீரியம் அதிகம். கரிசல்...

நீராகாரம்

  நீராகாரம்           நீராகாராம் என்று சொல்லப்படும் பழையசோற்று நீர் வண்டல் நிலமக்களின் விடியல் குடி உணவாகிறது. இதை நில உடைமையாளர்கள் நீர் உணவாக அருந்துகிறார்கள். உழைக்கும் மக்கள் இரவில் சமைத்து சோற்றில் மிஞ்சியிருப்பதில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து விடியலில் அந்நீரோடு கொஞ்சம் சோற்றைப் போட்டுக் கரைத்து, உப்புக் கலந்து குடித்துவிட்டு வேலைக்குச் செல்வார்கள். உயர்சாதிச் சாகுபடியாளர்களும் நில உடைமையாளர்களும் பழைய சோற்று நீருக்கென்று தனித்தே மண்பானையில் ஆக்கி இளஞ்சூடு பக்குவத்தில் நீர் ஊற்றி வேடுகட்டி வைத்து விடுவார்கள். இப்படித் தனியாகச் சோறு ஆக்குவதற்குப் பயன்படுத்தும் அரிசி கார் அரிசி என்று அழைக்கின்றார்கள்.    இந்த நெல் அரிசி வழக்கமாக நெல் விளையும் நஞ்சைக் காணியில் விளைவதில்லை. நீரோடைகளிலும் குட்டைகளிலும் நீர் தேங்குவதற்கு முன் மழை பெய்ததும் கருஞ்சிவப்பு நிறம் கொண்டு சற்று நீளமாகவும் பருமனாகவும் இருக்கும் கார் நெல் விதையை விதைத்து விடுவார்கள். அது முளைத்து வளர்ந்து நீர்மட்டம் உயர உயர அந்தப் பயிரும் சட்டென்று உயர்ந்து வளரும் தன...

நாட்டார் உணவுகள்

  நாட்டார் உணவுகள்           நாட்டார் உணவுகள் என்பது ஆதிமனிதன் உணவுப் பழக்கவழக்கங்களின் தொடர்ச்சியாகும் . நெருப்பைக் கண்டுபிடிக்காத காலத்தில் ஆதிமனிதன் பழங்களையும் , காய்களையும் இலைதழைகளையும் பூக்களையும் பச்சையாகவே சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்கள் . இன்றும் குரங்குகள் , அடர்ந்த வனங்களில் காய் , கனிகளை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வதைக் காண்கின்றோம் .       கிராமங்களில் மக்களின் உணவுகள் இன்றும் வேக வைக்காத , சுடாத உணவுகள் இடம் பெற்றுக் கொண்டுள்ளது . ·         காலை எழுந்தவுடன் பதநீர் குடிப்பது , பதநீரோடு நுங்கையும் கலந்து சாப்பிடுவார்கள் . இவ்வாறு காலையில் சாப்பிட்டால் மதியம் வரை பசிக்காது . பதநீர் குடிப்பதால் உடல் சூடு தணிகிறது . தென்தமிழகத்தில் பனைமரங்கள் மானவாரியாக விளைகின்றன . ·         மாலையில் இளநீருடன் வழுக்கையையும் சாப்பிட்டால் ருசியாக இருக்கும் . தினமும் காலையில் பதநீரும் , மாலையில் இளநீரும் சாப்பிடுபவர்கள் இன்றும் கிராமங்களில் வாழ...

செட்டிநாட்டு உணவு வகைகள்

  செட்டிநாட்டு உணவு வகைகள்            செட்டி நாட்டு உணவு என்பது செட்டியார் அல்லது செட்டி என்று அழைக்கப்படும் ஒரு சாதியினரின் உணவாக அறியப்பட்ட பெயராக இருந்தாலும் அந்தச் சாதி சார்ந்த பொதுப் பெயர் என்றே சொல்லலாம் .           செட்டிநாட்டு உணவு என்று பரவலாகப் பேசப்படுவதும் , சந்தையில் கூறப்படுவதும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைக் குறிக்கிறது . இதற்கு முக்கியக் காரணமாகப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் இவர்களின் பங்கு கணிசமாக இருந்ததுதான் . இந்தச் சூழ்நிலை காலனி ஆட்சியிலும் காலனிக்கு பிந்தைய ஆட்சியிலும் நிலவியது .           தமிழகத்தில் திராவிட இயக்கம் சார்ந்த அரசியலிலும் காங்கிரஸ் சார்ந்த அரசியலிலும் இயக்கி வந்தனர் . இதனால் சமூக அளவில் உயர்வாக மதிக்கப்பட்டதோடு , அவர்களுடைய கலாச்சாரமும் உணவுமுறைகளும் சமூகத்தில் பேசு பொருளாக மாறுவதற்குக் காரணமாயின என்று கூறலாம் . தமிழகத்தில் செட்டிநாடு என்று அழைக்கப்படும் நிலப்பகுதியைச் சேர்ந்த நாட்டுக்கோட்டைச் செ...