Skip to main content

Posts

Showing posts from November, 2022

காப்பியங்களில் நங்கையரின் கற்பின் நிலைகள்

  காப்பியங்களில் நங்கையரின் கற்பின் நிலைகள்         ”காதலர் இறப்பிற் கனையெரி பொத்தி           ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது           இன்னுயிர் ஈவர்; ஈயா ராயின்           நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்;           நளியெரி புகாஅ ராயின் அன்பரொடு           உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடன் படுவர் (மணி.2) என்று மணிமேகலைப் பகுதியில் 1. கணவன் இறந்தான் என்றதும் மார்படைப்பால் மனைவி உயிர் விடுதல் உண்டு; 2. தீமூட்டிப் பாய்ந்து உயிர் விடுதல் உண்டு; 3. மறுபிறப்பிலும் அவனை அடையப் பெறுவானாக என்று கைம்மை நோற்றிருத்தல் உண்டு என்ற மூன்று நிலைகளை அறிகின்றோம். உடன் உயிர் விடுதலைத் தலையாய கற்பு எனவும், தீப்பாய்தலை இடையாய கற்பு எனவும், நோற்றிருத்தலைக் கடையாய கற்பு என்றும் கூறுவர்.         கணவன் இறந்தபின் மன...

முருகனின் அறுபடை வீடுகள்

  முருகனின் அறுபடை வீடுகள்   1.   பழனி (ஆண்டிக் கோலம்) 2.   திருச்செந்தூர் (போர்க்கோலம்) 3.   திருப்பரங்குன்றம் (திருமணக் கோலம்) 4.   சுவாமி மலை(பொருள் உரை கோலம்) 5.   பழமுதிர்சோலை (விளையாட்டுக் கோலம்) 6.   திருத்தணிகை (சினம் தணிந்த கோலம்) இவை ஆறுபடை வீடுகள் என அழைக்கப்படுகின்றன. 1.         பழனி:   முருகன் ஆண்டிக் கோலம் பூண்டு, மேற்குத் தொடர்ச்சி மலையில் மேற்குத் திக்கில் நின்று   அருள் புரிகிறார். இவ்வுருவினை மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த போக முனிவர் என்னும் தமிழ் சித்தர் ஒன்பது விடங்களை இறுக்கி (நவபாஷாணம்) வடித்ததாகக் கூறப்படுகிறது. இவர் ஆண்டிக்கோலம் பூண்டு நிற்பதற்கு தமிழரிடையே வழங்கி வரும் கதை: திருக்கயிலையில் ஒரு நாள் பார்வதி பரமேசுவரன் இருவரும் வீற்றிருந்தனர். அப்போது அங்கு வந்த நாரத முனிவர் ஒரு மாம்பழத்தை ஈசனிடம் கொடுத்தார். அப்பழத்தை தந்தையிடம் இருந்த பெற விநாயகனும், முருகனும் போட்டியிட்டனர். அதனால் ஈசன் அவர்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைத்தார். போட்டியின் விதிப்படி, யார் இந்த ...

கணிகையர் கலைகள்

கணிகையர் கலைகள்         பரத்தையர்கள் அறுபத்துநான்கு கலைகளும் கற்றவர்கள். அவர்கள் ஆண்மக்களை மயக்குவதற்காகவே அக்கலைகளைக் கற்றிருந்தார்கள். அவர்கள் கற்றிருந்த கலைகள் பற்றி மணிமேகலை தெளிவாக தெரிவிக்கின்றது. மாதவி அறிந்திருந்த கலைகள் இவை இவை என்பதை அவளுடைய நற்றாய் சித்தராபதி கூறுவதாக மணிமேகலை ஆசிரியர் சொல்லுகின்றார்.             ”அரசர்க்கு ஆடும் கூத்து, எல்லோர்க்கும் பொதுவாக ஆடும் கூத்து என்றும் இருவகைக் கூத்துகளையும் ஆடக் கற்றவள். இசை தாளங்களுக்குரிய சீர், தாளம், யாழ் வாசிக்கும் முறை, நாடகங்களுக்குரிய பாடலகள் இவைகளையெல்லாம் அறிந்தவள். மத்தளம் வாசிப்பாள். புல்லாங் குழல் கற்றவள். நல்ல நீர் விளையாட்டை அறிந்தவள். பாயிலே பள்ளிக் கொள்ளும் முறையைக் கற்றவள். சமயத்துக்கேற்றபடி நடந்து கொள்ளும் இங்கிதம் தெரிந்தவள். உடம்பால் செய்யப்படும் அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்தவள். பிறர் கருத்தை அறிந்து கொள்ளும் அறிவு படைத்தவள். பிறர் மனத்தைக் கவரும்படி இனிமையான சொற்களைத் தொடுத்துக் கூறும் சொல்வன்மை வாய்ந்தவள். தன் உள்ளத்தைப் பிறர் காணாமல் ...

பழந்தமிழ் இலக்கியங்களில் மண உறவு முறைகள்

  பழந்தமிழ் இலக்கியங்களில் மண உறவு முறைகள்             மணவாழ்க்கை, பெரும்பாலும் ஒருவரையொருவர் விரும்பும் களவு வாழ்க்கையினின்றும் அமைந்திருந்தது. ஒரு தார மணமே (Monogamy)         சங்க காலத்தில் மணமுறை. ஆயின் ஒருவன் ஒரு பெண்ணிற்கு மேற்பட்டும் மணக்கலாம் எனபதாக, ‘மின்முறை துவை’(தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல்)   யைத் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுவர். திராவிடப் பழங்குடிகளிடம், ஆடவன் பலரை மணத்தலும் (Polygamy), ஒருத்தி பலரைக் கணவனாகக் கொள்ளலும்(Polyandry), இருந்து வந்த பழக்கமாகும். திருமணத்திற்கு முன்னரே உறவு கொள்ளும் முறை(Prd-marital Relationship) இருளர், தோடர், கோத்தர், குறும்பர், முதுவர், பழியர், ஊராளியர் முதலான திராவிடப் பழங்குடியினரிடம் காணப்படுகின்றது. மணத்திற்கு முன்னர் களவு வாழ்க்கையில் ‘மெய் தொட்டுப் பயிறல், மெய்யுறு புணர்ச்சி’ முதலான மெய்ப்பாடுகளை ஈண்டு நினைத்தல் தகும். பெற்றோர் பார்த்து முடிக்கும் மணமும் (Arranged Marriage) ஆணின் வீரவேட்ட ஆற்றலைக் காட்டி முடிக்கும் மணமும்(Marriage ...

தமிழர்களின் மாற்றுமுறை மருத்துவம்

  தமிழர்களின் மாற்றுமுறை மருத்துவம்         மாற்றுமுறை மருத்துவம் பலவிதமான மூலங்களைப் பெற்றுள்ளது. நாட்டுப்புற மரபு, மரபான பழக்கங்கள், தத்துவக் கோட்பாடுகள், உடற்பயிற்சி முறைகள், யோகாசனங்கள் என அவற்றைக் குறிப்பிடலாம். மாற்றுமுறை மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களில் சிலர் கற்றறிந்தவர்களாகவும், திறமையாளர்களாகவும் மற்றும் சிலர் அரைகுறையாளர்களாகவும் உள்ளனர். இவர்கள் முறையான இசைவு பெற்றவர்களாகவோ, பதிவு பெற்றவர்களாகவோ இல்லாமல் பாமர நோயாளிகளை அணுகி அவலக்கு ஆளாகின்றனர்.           மாற்றுமுறை மருத்துவத்தை நான்கு வகையாகப் பிரிக்கலாம். நம்பிக்கை அடிப்படையில் குணப்படுத்தல், மனோதத்துவவாதிகள், மந்திரவாதிகள், மற்றும் மனவியல் வல்லுநர்கள் ஆகியோர் இப்பிரிவில் அடங்குவர். உணவுமுறையின் மூலமாகச் சிகிச்சை அளிப்பவர்கள் மூலிகைகளைக் கொண்டும் ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் போன்றவைகளைக் கடைப்பிடிப்பவர்கள் இன்னொரு பிரிவினர். மூன்றாவது பிரிவில் ஓமியோபதி போன்ற மருத்துவ முறைகளைக் கையாள்வோர், நான்காவது பகுதியில், சீனமக்களிடையே செல்வாக்குப் பெற்ற அக்குபஞ...

தமிழர் உணவின் மகத்துவம் (மருத்துவம்)

  தமிழர் உணவின் மகத்துவம் (மருத்துவம்)         நாம் உட்கொள்ளும் அனைத்தும் உணவும் மருத்துவத் தன்மை கொண்டவை. மேலை நாட்டவர் மருந்தினை உணவோடு சேர்க்க மாட்டார்கள். அது தனி, உணவு தனி என்று பிரித்து வைப்பார்கள். நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கள், கீரைகள், கறிவேப்பிலை போன்றவை இயற்கை தரும் செல்வங்களே. வேம்பு கிருமிகளைக் கொல்லும் என்று அறிந்து நோய் பெற்றவர் வீட்டில் அதைச் சொருகி வைத்தனர். மேலும் பதிற்றுப்பத்தில்,                    ” மீன் தேர் கொட்டின் பனிக்கயம் மூழ்கிச்                      சிரல் பெயர்ந்தன்ன நெதுவாள் ஊசி                       நெடுவாசி பரந்த வடுவாழ் மார்பின்                      அம்புசேர் உடம்பினர்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் புண்ணை ஊசி கொண...

சிபி சக்ரவர்த்தி

  சிபி சக்ரவர்த்தி      வட இந்திய அரசனும் அந்தண சத்திரியனுமான சிபி, தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை ஆண்ட சோழ அரசனாகக் குறிக்கப்படுகிறார். இவர் ஒருநாள் அரசவையில் அமர்ந்திருந்த போது, பெரிய பருந்து ஒன்றினால் துரத்தப்பட்ட சிறிய புறா ஒன்று இவர் காலடியில் வந்து விழுந்தது. பருந்து மிகவும் பசியோடு இருந்தபடியால் அப்புறாவைக் கொன்று தின்ன விரும்பியது. ஆனால் சிபிச் சக்கரவர்த்தி தன் காலடியில் தஞ்சம் அடைந்த புறாவைக் காக்க உறுதி பூண்டார். எனவே தன் கால் சதைகளை அரிந்து, துலாக்கோலில் நிறுத்தி, அப்புறாவின் எடைக்கு ஈடான சதைகளை பருந்திடம் அளித்தார். பிற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட, வீர சோழியர்கள் தாங்கள் சிபியின் வழியில் வந்தவர்கள் என்றே கூறிக் கொண்டனர். மேலும் பழைய தமிழ் நூல்களும் சிபியின் பெருமைகளைப் பலவாறு பேசுகின்றன.           ”தன்னகம்புக்க குறுநடைப் புறவின்           தபுதி அஞ்சிச் சீரை புக்க           வரையா ஈகை உரவோன் மருக” –புறநானூறு  ...

மேற்கணக்கு கீழ்க்கணக்கு- விளக்கம்

  மேற்கணக்கு  கீழ்க்கணக்கு- விளக்கம் சங்க காலத்தில் அறஇயலை இருவகையாக வகைப்படுத்திக் கூறியிருக்கின்றனர். அவைகளை மேற்கணக்கு, கீழ்க்கணக்கு எனக் கூறலாம். மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு, கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. மேற்கணக்கு தொகையும் பாட்டும், தொகை எட்டு பாட்டு பத்து, மேற்கணக்கு என்று அமைந்த காரணங்களைக் காணலாம். மேற்கணக்கு - விளக்கம் மேற்கணக்கு நூல்கள் முன்னோர் வாழ்ந்து காட்டிய வரையறை கொள்கையை மையமாகக் கொண்ட விளக்கங்கள். இன்று நீதி மன்றத்தில் முன்னொரு காலத்தில் நடைபெற்ற வழக்கு, தீர்ப்பு ஆகியவை நிகழ்வுகளாகவே அமைக்கப் பெற்றிருப்பது போல இதுவும் வாழ்வியல் நிகழ்வுத் தொகுப்பு நூல்கள். அவை இரண்டு வகை, ஒருவன் தன்னளவில் வாழ்ந்த நிலை; மற்றவர்களின் நன்மைக்காக அவன் சமூகத்துக்கு ஆற்றிய தொண்டுகள். தன்னளவில் செய்த வாழ்வியல் அறங்கள் தொகையாயின. பரந்து பட்டுச் சென்று புகழ்விளைத்ததாதலின் பாட்டு ஆயின. எனவே சங்க காலத்தில் தன்னளவில் அறம் மேற்கொள்ளல் என்பதைவிட, சமூக நலன்கருதி அறம் மேற்கொள்ளுதல் அதிகம் என்பதனாலேயே தொகை எட்டாகவும் பாட்டு பத்தாகவும் நின்றன. கீழ்க்கணக்கு - விளக்கம் கீழ்க்கணக்கு என...

ஐம்பெருங் குழுவும் – அமைச்சர் சுற்றமும்

  ஐம்பெருங் குழுவும் – அமைச்சர் சுற்றமும்         சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இருபெரும் காப்பியங்களின் உரைகளில் இருந்து மன்னனுக்கு உதவிட ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்னும் இரு அமைப்புகள் இருந்தன என்பதை அறிய முடிகிறது. இவ்விரு குழுக்களும் அரசனுக்கு அருகிருந்து ஆட்சிக்குச் சிறப்பான வழிமுறைகளை எடுத்துக்கூறின. ஐம்பெருங்குழுவில், 1.   அமைச்சர் 2.   புரோகிதர் 3.   சேனாபதியர் 4.   தூதுவர் 5.   சாரணர் ஆகிய உறுப்பினர்கள் இருந்தனர்.           இவர்களுள் முதலாவதாகக் குறிப்பிடப்பெறும் அமைச்சரின் தன்மைகளைத் திருவள்ளுவர் விளக்கிக் கூறுகிறார். அவர்,           ”வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு             ஐந்துடன் மாண்டது அமைச்சு”   (குறள்-632) என்னும் குறளில் அமைச்சருக்கு அமையவேண்டிய இன்றியமையாப் பண்புகளை எடுத்துரைக்குமிடத்து, ‘கற்றறிதல்’ என்னும் ஒரு தன்மையைக் குறிப்பி...