கற்பு - தந்தை பெரியா ர் கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால், கல் என்பதிலிருந்து வந்ததாகவும், அதாவது படி – படிப்பு என்பது போல் கல் – கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. ‘கற்பெனப்படுவது சொற்றியம்பாமை!’ என்கிற வாக்கியப்படி கற்பு என்பது சொல் தவறாமை அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திறகு விரோதமில்லை என்கின்ற கருத்துக்கள் கொண்டதாக இருக்கிறது. நாயகன் – நாயகி என்கின்ற சமத்துவமுள்ள பதங்களும் கதைகளிலும், புராணங்களிலும் ஆண் – பெண் இச்சைகளை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்குப்படுகின்றன. ஆகவே காமத்தையும், அன்பையும் குறிக்கும் காலங்களில் சமத்துவ பொருள் கொண்ட நாயகர் – நாயகி, தலைவர் – தலைவி என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, கற்பு என்ற நிலையில் வரும்போது அதைப் பெண்களுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தி பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ளவேண்டுமென்று கருத்துக் கொள்ளப்படுகிறது. திருக்குறளிலும் வாழ்க்கைத் துணைநலத்தைப் பற்றி 6 – ஆம் அத்தியாயத்திலும் பெண்வழிச் சேரல் என்பதைப் பற்றி சொல்லவந்த 9 அவது அத்தியாயத்திலும் மற்ற...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!