தேவலோக மூலிகை வெற்றிலை வெற்றிலை ஒரு மங்களகரமான தெய்வீக மூலிகை. கோயில்களிலும், வீடுகளிலும் கொண்டாடப்படும், சுப நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் புனிதக் கலசங்களில் கூட மாவிலையும் வெற்றிலையும் மங்கலப் பொருட்களாக வீற்றிருக்கும். திருமணம் போன்ற புனிதக் காரியங்களில் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. முதன் முதலாய் நம் வீடுகளுக்கு வரும் விருந்தினரை நன்கு உபசரித்து, விருந்தளித்து, கடைசியில் வெற்றிலையுடன் தாம்பூலம் தந்து, பிரியாவிடை கொடுத்தனுப்பவது நமது பழக்கம். மங்களகரத்தின் மறுசொல் வெற்றிலை என்றே சொல்லலாம். வெற்றிலையை தாம்பூலமாக உபயோகிக்கும்போது, அதனுடன் பார்க்கும் சுண்ணாம்பும் சேரும். தாம்பூலம் போடும்போது வெற்றிலையின் காம்பு, நுனி, வெற்றிலையின் நடு நரம்பு ஆகியவற்றை நீக்கியே உபயோகிக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை மெல்லும்போது வாயில் முதலில் ஊறும் நீர் ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!