கீழ்க்கணக்கு நூல்களில் ‘நோய்’ ‘நோய்’ என்பது ‘ நொ ’ எனும் வேர் சொல்லாகும். இதற்கு அகராதி நொவ்வு, நோதல் என்று பொருள் தருகிறது. ஒன்றைத் தாக்கி நொய்மை அதாவது சிறுமை அடையச் செய்வதனால் ‘நோய்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. நோய் என்பது தளர்ச்சி, மெலிவு, துன்பம், வருத்தம், வியாதி, அச்சம், குற்றம், துக்கம், நோவு என்னும் பல பொருள்களிலும் வழங்கப்படுகிறது. ‘பையுளும் சிறுமையும் நோயின் பொருள்’ (தொல்,சொல்.உரி.45) உடல் மற்றும் உள்ளத்தை வருத்துவது ‘ பையுள்’ எனவும் துன்பத்துடன் கூடிய உளநோயைச் ‘சிறுமை’ (பிணி) எனவும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். நோயென்பது எல்லா இடங்களிலும் இருப்பது என்பதை, ”நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு ஆவயின் வமூஉங் கிளவி எல்லாம் நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்ட ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!