சங்க இலக்கியத்தில் மலர்களின் மருத்துவம் பழந்தமிழர் மலர்களைக் கண்ணியாகவும் , கோதையாகவும் மாலையாகவும் மட்டுமன்றித் தழையுடன் சேர்த்து மலர்களை ஆடையாகவும் அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் . நோய்கள் தம்மை அணுகாதவண்ணம் மருத்துவ அறிவுடன் மலர்களின் குணங்களை அறிந்து நன்கு பயன்படுத்தினர் . வேந்தரும் , மறவரும் , புலவரும் , பாணரும் , பொது மக்களும் என அனைவரும் நாள்தோறும் தலையில் சூடியும் , மாலையாக அணிந்தும் மலர்களோடு தோற்றமளித்ததைச் சங்க இலக்கியங்களின் மூலம் அறியலாம் . அக்கால மக்கள் மலர்களின் தன்மைகளை அறிந்தே பயன்படுத்தியுள்ளனர் . சங்க இலக்கியத்தில் மலர்கள் பயன்படுத்திய விதம் கல்வி வளர்ச்சிக்கும் , அறிவு வளர்ச்சிக்கும் தேவையான மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மையுடையது தாமரை மலர் . இம்மலரை , பாணரும் , விறலியரும் சூடினர் என்பதை , ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!