பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூலில் பெண்ணியச் சிந்தனைகள் ஆண் , பெண் என்ற இருவரில் உயர்வு தாழ்வு இல்லை . பெண்களுக்கு முதன்மை வழங்கவேண்டும் என்பது அறிவும் அன்பும் வாய்ந்தோர் கருத்து . பெண்களுக்கு இயல்பாக அமைந்துள்ள குணம் , தொண்டு , கடமை முதலியவற்றை நோக்கும் போது முதன்மை பெற்று விளங்குவது நன்கு புலனாகும் . ஆண்களின் பேற்றிற்கும் , வளத்துக்கும் , நலத்துக்கும் , பிற ஆக்கத்திற்கும் நிலைக்களனாயிருப்பது பெண்ணுலகம் என்பது எவரும் அறிந்த ஒன்று . ஆகையால் முதன்மை வழங்கினால் நேரும் இழுக்கென்ன ? நமது நாடும் பெண்மையும் நம் முன்னோர்கள் கல்வியைக் ‘ கலைமகள் ’ என்றும் , திருவைத் ‘ திருமகள் ’ என்றும் , ஞானத்தைப் ‘ பரை ’ என்றும் கொண்டது ஆராயத்தக்கது . நாட்டைப் பலவழிகளிலும் காட்டைக் காக்கும் காட்டுக் கன்னியை ‘ வனதேவதை ’ என்று வாழ்த்துவதும் , பல்லுயிர்களைத் தாங்கும் நாட்டைத் ‘ தாய் நாடு ’ என்றும் வாழ்த்துவதும் எண்ணவேண்டும் . மாணிக்கவாசகரு...
நாட்டுப்புற மக்களின் வழிபாடுகள் வழிபாடு என்னும் சொல் ‘ வழியில் செல்லுகை ’ என்னும் பொருளில் தொடங்கியது . பிறகாலத்தில் வணங்குதல் என்ற பொருளில் நிலைபெற்றது . பல பொருள்களில் வளர்ச்சி அடைந்த வழிபாடு என்னும் சொல் முழுக்க முழுக்க சமயக் கோட்பாட்டு அடிப்படைகளில் ஒன்றான வழிபட்டு நிற்றல் என்பதில் பொருள் கொண்டது . உள உடல் செயல்பாட்டையே தன் பொருளைக் கொண்டு வழிபாடு விளங்குகிறது . மக்கள் தங்களின் தெய்வங்களை வழிபடும் முறைகளைக் குறிக்க வழிபாடு என்ற சொல் உலக வழக்கில் கையாளப் பெறுகிறது . நாட்டுப்புற மக்களின் வழிபாட்டில் இயற்கை வழிபாடு , ஆவிகள் வழிபாடு , குலக்குறி வழிபாடு , புனிதப் போலிப் பொருள் வழிபாடு , முன்னோர் வழிபாடு ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன . 1. இயற்கை வழிபாடு நாட்டுப்புற மக்கள் ஞாயிறு , சந்திரன் , மழை , மரம் , விலங்குகள் என்று வழிபடுகின்றனர் . இவ்வழிபாடு இன்றும் தொடர்ந்து நிலைபெற்றுள்ளது . இயற்கையின் மீது கொண்ட அச்சம் வழிபாடாக மலர்ந்தது என்று மானுடவியலாரும்...