முல்லை முல்லைப் பூ சிறத்தலால் முல்லை நிலம் எனப் பெயர்பெற்றது. முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலமும் என்று கூறுவர். முல்லை தொத்தி ஏறும் ஒரு செடியாகும். இஃது இயற்கையில் குறுங்காடுகளிலும் காடு சார்ந்த வெளிகளிலும் வளர்கின்றது. சங்க இலக்கியத்தில் மிகப் பல இடங்களில் முல்லையைப் பற்றிய பாடல்கள் குறுந்தொகையில், ”கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை” (குறுந்,62) ”சிறுவீ முல்லைக் கொம்பிற றாஅய்” (குறுந்,275) ”இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக் குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்” (குறுந்,220) இடம்பெற்றுள்ளன. முல்லை ஒரு கொடி என்று சங்க நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது. ‘முல்லை மென்கொடி’ ‘பைங்கொடி முல்லை’ என்று அழைக்கப்படுகின்றது. முல்லைச் செடியின் புதிய கிளைகள் மென்மையாக...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!