புலிப்பல் தாலி ‘புலியின் பல்லைக் கோர்த்து செய்த கழுத்தணி எனவும் பொன்னுடைத் தாலி’ என்றும், ‘பொன்னோடு புலிப்பற் கோத்த புலம்பு மணித் தாலி’ என்றும் அழைக்கப்பட்டது. வீரத்தின் விளைவாக பெறும் புலிப்பல்லைப் பச்சிளம் சிறுவர்கட்கு அணிவித்தமை, வீரத்தை இளமையிலேயே உணரும் உணர்வைத் தூண்டுதல் என்ற வகையினிடம் பெற்றிருந்தது. சிறுவர், சிறுமியர் இருபாலருக்கும் புலிப்பல் தாலி அணிவிக்கும் வழக்கம் பண்டை குறிஞ்சி நில மக்களாகிய கானவரிடையே நிலவிய ஒன்று. புலிப்பல் பெற்ற முறையைச் சிலப்பதிகாரம், ”மறங்கொள்வயப் புலி வாய்பிளந்து பெற்று மாலை வென் பற்றாலி நிரை பூட்டி” என்று வீரமிக்க வலிய புலியை கிழித்துப் பெற்றமை விளக்கப்பட்டுள்ளது. வேட்டையாடிப் பெற்ற புலிப்பல் வீரத்திலன் விளைவால் கிடைத்தப் பொருள். எனவே வீரத்தின் அறிகுறியாகத் தம் மக்களுக்கு அணிவித்தவர் என்பதும் புலனாகிறது. பெரியபுராணத்தில், ”ஆண்டெதிர் அணைந்து செல்ல விடும் ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!