Skip to main content

Posts

Showing posts from September, 2022

மாளிகைகள்

  மாளிகைகள்         நம் முன்னோர்கள் மாட மாளிகைகள் வானுயர ஓங்கிய வண்ணம் எழுப்புவதில் கைவண்ணம் பெற்றிருந்தனர். கட்டப்பெறும் மாளிகைகளின் வாசல் வடக்கு நோக்கியோ, கிழக்கு பார்த்தோ இருக்குமாறு அமைத்தார்கள். இதனை,              ”மாளிகை தனக்கம் மாநகர் வடகுணபால் கண்டு” என்று திருவிளையாடற்புராணத்தில் குறிப்பிடுகின்றார்.           மாளிகைகளால் காற்றும் வெளிச்சமும் புழங்கும் வகையில் காலதர்களும் பருவத்திற்கு ஏற்ற வேனிற்பள்ளி கூதிப் பள்ளிகளும், நிலவுப் பயன் கொள்ளும் வேயா மாடங்களும் வைத்து வடிவமைக்கப்பட்டன.           காலதர் என்பற்கு சாளரம், நேர்வாய்க்கட்டளை, புழை எனப் பல பெயர்கள் உள்ளன. சாளரங்களில் மணிமாலைகள் தொங்கவிடப்பட்டு எழிலுற அமைக்கப்பட்டிருந்ததை,           ”மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த             கோலச் சாளரக் குறுங்கண்” (சிலம்பு-2:22-23) சி...

சுருங்கை வீதிகள் (சுரங்கப் பாதைகள்)

  சுருங்கை வீதிகள் (சுரங்கப் பாதைகள்)         பழங்காலம் முதல் அரண்மனைகளிலும் பிற இடங்களிலும் சுருங்கை வீதிகளை அமைத்துள்ளனர். சுருங்கை வீதிகளை அமைத்துள்ளனர். சுருங்கை வீதிகளில் யானை வரிசைகள் நடந்து செல்கின்ற அளவிற்கு இடப்பரப்பு உடையதாக இருந்தது.           ”பெருங்கை யானை இனநிரை பெயரும்              சுருங்கை வீதி மருங்கில் போகி” (சிலம்பு14:64-65) என்று சிலம்பு மூலம் அறியலாம்.          மன்னர்கள் தமது பெரும் நிதிக் குவியலை நிலவரை (சுருங்கை) யில் மறைத்து வைத்தனர். நிலவறைக்குச் செல்லும் சுருங்கைப் படிக்கட்டு இயற்கையான நிலப்பரப்பு போன்ற மேற்புறத் தோற்றத்துடன் காணப்பட்டது. நிலவறைக்கு வரும் அந்நிய மாந்தரை அச்சுறுத்தும் இருள், முட்டுத்திருப்பம், திடீர்க்குழிகள், வழியடைப்பு முதலான இடர்பாடுகள் நிலவறையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். இதனை,           ”பெருங்கல நிதியம்பெய்து வாய் அமைத்...

இலக்கியங்களில் நட்பு

  இலக்கியங்களில் நட்பு           மனிதன் என்பவன் சூழ்நிலைக் கைதி. சுற்றி இருப்பவர் சூழ்நிலைக்கேற்பத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியவளாகிறான். உறவுக்கு வெளியே, அதற்கும் மேலே நட்பு என்கிற குணம் அவனுக்கு அமைந்துவிடுகிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டு உதவி செய்து வாழக் கடமைப்பட்டவனாகிறான். அந்தக் கடமைப்பாட்டையே நட்பு என்கிறார்கள். மற்றைய உறவுகளைவிடவும் இந்த நட்பு என்னும் உறவே புனிதமானது. அதனால்தான் உயிர்காப்பான் தோழன் என்னும் உயர்வு அந்த நட்புக்குச் சூட்டப்படுகிறது. ·     உறையூரிலிருந்தக் கோப்பெருஞ்சோழனும், மதுரையிலிருந்த பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் புலவர் வாயிலாய் அறிந்து ஒத்த உணர்ச்சியால் நண்பர்களாயிருந்து, கோப்பெருஞ்சோழன் இறந்தபோது பிசிராந்தையாரும் உடனுயிர் நீத்தது. ”உணர்ச்சிதான் நட்பாம்” என்பதற்கு மிகச்சிறந்த சான்று. ·         தீ நட்புக்கு எடுத்துக்காட்டாகப் பாரதத்தில் சகுனி, இராமாயணத்தில் கூனி. ·         இராமனுக்கு ஆற்றைக் கடக்க நாவாய் ஓட்ட...

பச்சைக் குத்துதல்

  பச்சைக் குத்துதல்         பச்சை வண்ணத்தில் மக்கள் தம் உடம்பில் பல வடிவங்களை வரைந்து கொள்வதனைப் பச்சைக் குத்துதல் என்பர். அழகுக்காகவும் அடையாளத்திற்காகவும் இக்கலையைப் பயன்படுத்துவர். மார்பு, மேல் கை, முன்னங்கை, கால் முதலான உடற்பகுதிகளில் பச்சைக் குத்துதல் வழக்கம்.           மஞ்சள் பொடி, அகத்திக்கீரை ஆகியவற்றை அரைத்துத் துணியில் வைத்து திரியாக்கி எரித்துக் கரியாக்குவர். அக்கரியினை நீர் அல்லது தாய்ப்பாலுடன் கலந்து மையாக்குவர். ஊசிகளால் விரும்பிய இடத்தில் பச்சைக் குத்துவர்.       தமிழ்நாட்டில் குறவன், குறத்தியர் பச்சைக் குத்துதலைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். முன்பு இதற்குக் கூலியாக அரியினைப் பெறுவர்.           ஒருமுறை பச்சைக் குத்திக் கொண்டால் சாகும்வரை அந்த அடையாளம் மறையாது. எனவே, கட்சி விட்டு கட்சி தாவாமல் இருக்க சில நேரங்களில் அரசியலாளர்களும் கூடப் பச்சைக் குத்திக் கொள்ளுதல் உண்டு. காதலர்கள் தங்கள் காதலின் வலிமையினைப் பலப்படுத்த...

கோலம்

  கோலம்         கோலம் என்றால் அழகு என்று பொருள். இந்தியா முழுவதிலும் உள்ள இவ்வழக்கம் இந்துக்களிடம் சிறப்பாகக் காணப்படுகின்றது. தமிழர்கள் கோலமிடுதல் என்றும் மலையாளிகள் அஸ்தம் என்றும், கன்னடர் ரங்கவல்லி அல்லது ரங்கோலி என்றும் அழைப்பர்.        நாள்தோறும் வைகறையிலும், மாலையிலும், கோயில் விழாக்களிலும் பொங்கல், நவராத்திரி முதலான விழாக்களிலும், திருமணம் பூப்பு முதலான சடங்குகளிலும் கோலம் போடுவது வழக்கம். வீட்டின் முற்றம் அல்லது முக்கிய உட்பகுதியில் கோலமிடுவர். அரிசிமா, கல்மா, மண், சுண்ணப்பொடி ஆகியவை பல வண்ணங்களில் கோலப்பொடியாகப் பயன்படுகிறது. திருவிழாக்களில் பல வண்ணங்கள் எடுப்பாகத் தெரியவும் காற்றில் கலைந்து விடாமல் இருக்கவும் உப்பில் பல வண்ணப் பொடிகளைக் கலந்து கோலமிடுவர்.           பொதுவாகப் புள்ளி வைத்துக் கோலமிடுவதுதான் தமிழர் வழக்கம். புள்ளி வைக்காத கோலவகை ரங்கோலி எனப்படும். இம்முறை கன்னட நாட்டிலிருந்து பரவியது.

வேளாளர் வீடுகள்

  வேளாளர் வீடுகள்           தம் வாழ்வியலுக்கு ஏற்ப குடியிருப்புகளைத் திட்டமிட வேண்டும் என்னும் கொள்கைக்கு ஏற்ப வேளாளர் வீடுகள் அமைக்கப்பட்டன. குதிர்கள்    வேளாண்மை, சார்ந்த வாழ்க்கை வேளாளர் வாழ்க்கை, விளைந்த தானியங்களைப் பாதுகாக்கவும், சேமிக்கவும் குதிர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். குதிர்கள் பெண் யானைகளைப் போன்று அளவில் பெரியதாக இருக்கும். அக்குதிர்களைக் கட்டி விடுவதற்கு ஏற்ற வண்ணம் முன்றில்களைப் பழந்தமிழர்கள் அமைத்துக் கொண்டனர். இதனை,           ” பிடிக் கணத் தன்ன குதிருடை முன்றில்” (பெரும்பாண். 186) என்று பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது. கொட்டில்கள்        கலப்பை சார்த்தி வைத்துக் கொள்ள வலிமையான நெடிய சுவர்களுடன் கூடிய கொட்டில்களைக் கட்டி விட்டனர். இதனை,           ”குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி             நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டி...

உழைப்பால் உயர்ந்தவர்கள் - பழந்தமிழர்!

  உழைப்பால் உயர்ந்தவர்கள் - பழந்தமிழர்!         பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடு நம் தமிழ்நாடு. இத்தகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப் பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் அக்காலத்தில் இல்லை.  செல்வர் வாழ்க்கைக்கு ஒரு உதாரணமாக, கோவலன் பெருஞ்செல்வர் குடும்பத்தில் பிறந்தவன், மணம் ஆன பிறகு தனிக்குடும்பம் நடத்தி வந்தான். தானே வாணிகமும் செய்தான். மாதவியோடு சேர்ந்து குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்தான். மலையத்தனைச் செல்வத்தை அழிப்பினும், மாதவியை வெறுத்து வந்த பின்னர்த் தந்தையைக் கண்டிருப்பானேயாகில் மறுபடியும் மலையத்தனைச் செல்வத்தைப் பெற்று மீண்டும் வாணிகம் தொடங்கியிருக்கலாம். ஆனால், மானமுடைய அவன் அவ்வழியை மேற்கொள்ளவில்லை. மீண்டும் தனது உழைப்பால் பொருள் தேடவேண்டும் என்று நினைத்தானே தவிர, எளிமையாக மானத்தை இழந்து பொருளைப் பெறவேண்டும் என்று எண்ணவில்லை. இன்று கள்ளச் சந்தையில் பொருள் தேடும் பெரியோர் நிறைந்த நம் நாட்டில் இத்தகைய உதாரணம் எங்ஙனம் வரவேற்கப்படு...

பழந்தமிழரின் அயல்நாட்டு வாணிகம்

  பழந்தமிழரின் அயல்நாட்டு வாணிகம்           பழந்தமிழர் வேற்று நாட்டினருடன் செய்த வாணிகத்தை வரையறுத்தே செய்தனர் என்பதை அறிகிறோம். அதனை எவ்வாறு வரையறுத்தனர் என்பதை அறிவது மிக இன்றியமையாதது. இன்றும் வேற்று நாட்டிலிருந்து அதிகமான பொருள்கள் வரக்கூடாதெனக் கருதினால், அரசாங்கத்தார் அதனைத் தடுப்பதற்கு ஒரே முறையைத் தான் கையாளுகின்றனர். அப்பொருளின் மேல் சுங்கவரியை உயர்த்திவிடுவதே (Higher Tariff) அம்முறையாகும். அங்ஙனம் செய்வதால் பொருளுக்கு இயற்கையாக வைக்க வேண்டிய விலைக்குமேல் இந்தச் செலவையும் ஏற்றி வைத்து விற்க நேரிடுகிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்க அப்பொருள் தகுதியற்றதாகிவிடுமேயானால் அதனை யாரும் இறக்குமதி செய்யமாட்டார். எனவே, இம்முறையிலேயே அன்றைய தமிழ்நாட்டில் வாணிகம் நடைபெற்றதெனப் பட்டினப்பாலை குறிக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் சுங்கவரி பட்டினப்பாலை கரிகாற்பெருவளத்தான் என்ற சோழ அரசன் மேல் பாடப்பட்ட அரிய பாடல். அவன் இமயஞ் சென்று புலிக்கொடி நாட்டி மீண்டவன். எனவே, அவன் காலத்தில் தமிழ்நாடு செல்வம் கொழித்திருக்குமென்பதில் ஐயமில்லை. அவனுடைய மு...