சங்கு தமிழக மக்கள் வழக்கில் குழலுக்கு முற்பட்டு இருந்த ஊது கருவி சங்கு. இது இயற்கை தந்த இசைக்கருவி. சங்க இலக்கியத்தில் வளை என்று அழைக்கப்பட்டது. சங்கின் ஒலி சங்க நாதம் என்று அழைக்கப்படும். சங்கொலி மெய்யுணர்வைத் தூண்டும் வல்லமையுடையது. சங்கினைப் பண்டைத் தமிழர் குறியீடாகவும் இறைவழிபாட்டிலும் இணைத்துக் கண்டனர். மங்கல/அமங்கல நாட்களில் ஊதப் பெற்றது. சங்கில் வலம்புரி சங்கு புனிதமாகப் போற்றப்படுகிறது. சங்கினைக் கலைஞர்கள் தம் ஆடரங்கு, பாடரங்கு, இசையரங்குகளில் பயன்படுத்தியுள்ளனர். சங்கு திருமாலிற்குரிய சின்னமாகப் போற்றப்படுகிறது. சங்கு/கோடு/வளை வலம்புரி என்று சங்க இலக்கியங்களில் பதியப் பெற்றுள்ளது. பண்டைத் தமிழ் மக்கள் இறைவழிபாட்டிவ் முருகனை வணங்கும் வழிபாட்டில் சங்கு பயன்படுத்தப் பெற்றமையைத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. ”அந்தரப் பல்லியங்கறங்கத் திண்காழ் வயி ரெழ...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!