புத்தர் இமயமலை அடிவாரத்தில் ‘ கபில வஸ்து ’ என்னுமிடத்தில் கி . மு . 563- இல் சித்தார்த்தன் ( புத்தர் ) பிறந்தார் . புத்தரைப் பருவ வயது வரை அரண்மனைக்கு வெளியே விடாமல் போற்றி வளர்த்தனர் . துன்பம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்க்கப்பட்டனர் . ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே வரும் போது மூப்பு , பிணி , சாக்காட்டைப் பார்த்தார் . அதனால் உலக வாழ்வைத் துறந்து இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் . பீகார் மாநிலம் கயா என்னுமிடத்தில் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றிய பின் ஆசையே அத்துணைத் துன்பத்திற்கும் காரணம் என்பதைக் கண்டறிந்தார் . போதி மரத்தடியில் ஞானம் பெற்றபின் நாற்பத்தைந்து ஆண்டுகள் தமது உபதேசங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார் . நல்லவர் – தீயவர் , ஏழை – பணக்காரன் களைந்து அனைவரையும் சமமாக மதித்து அருளுரை வழங்கினார் . பகுத்தறிவு சிந்தனைகள் · சாத்திரங்களை நம்பாதீர்கள் . · நடைமுறை என்பதற்காக மூடபழக்கங்...
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!