Skip to main content

Posts

நில வளம் காக்க, நீர் வளம் பெருக்கு!

  நில வளம் காக்க, நீர் வளம் பெருக்கு!   நூல் – புறநானூறு, பாடல் எண் - 18 பாடியவர் – குடப் புலவியனார் திணை – பொதுவியல் திணை பாடப்பட்டவன் – தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டின் நெடுஞ்செழியன். (தலையாலங்கானம் என்னுமிடத்தே முடிவேந்தரையும் வேளிர்களையும் வென்றதால், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் என்று சிறப்பிக்கப்படும் நெடுஞ்செழியன் பால், நாட்டில் நீர் வளம் மிக வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்த, குடநாட்டைச் சேர்ந்த புலவியனார் என்னும் புலவர் பாடியது.)   ”முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியன்ஞாலம் தாளின் தந்து தம்புகழ் நிறீஇ: ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்! ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய   பெருமைத்து ஆகநின் ஆயுள் தானே! நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் பூக் கதூஉம் இன வாளை நுண் ஆரல், பரு வரால் குரூஉக் கெடிற்ற குண்டு அகழி;   வான் உட்கும் வடிநீள் மதில் மல்லன் மூதூர் வய வேந்தே! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒருநீ ஆகல் வேண்டினும் சிறந்த   நல்இசை நிறுத்தல் வேண்டினும...