Skip to main content

நவராத்திரி விழா

 

நவராத்திரி விழா

          மூன்று மூர்த்திகள், நான்கு வேதங்கள், ஐம்புலன்கள், ஆறு சாஸ்திரங்கள், பதினான்கு உலகங்கள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் என்று வகுத்த நம் முன்னோர்கள்: கலைகள் அறுபத்தி நான்கு என குறிப்பிட்டுள்ளார்கள்.

·        நவராத்திரி விழாவே ஒரு கலை விழாதான். கொலு வைக்கும் மங்கையரின் நுண்ணறிவை வியக்க வைக்கிறது.

·        ஒன்பது நாட்கள் இரவில் வீட்டையே கோயிலாக்கித் தெய்வீகம் தவழும் திருவிடமாக்கித் திகழும் மகளிர்க்கு இவ்விழாவில் பங்குண்டு.

·        இந்த ஒன்பது நாட்களும் காலையில் நீராடி வழிபாடு நடத்துவதுடன்; ஒவ்வொரு நாளிலும் கன்னிப் பெண்களை (2 வயது முதல் 10 வயது வரை) கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்கா, சயத்திரா, குமாரி, திரிமூர்த்தி என்ற இறைவனின் கூறுபாடுகளாகப் பாவித்து வணங்கி, உணவு உடை, அணிகலன்கள் முதலியன வழங்க வேண்டும்.

·        அவ்வாறு இயலாதவர்கள் லலித சகஸ்ர நாமம், சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, மீனாட்சி யம்மைப் பிள்ளைத் தமிழ் ஆகிய சமய இலக்கியங்களைக் கற்றும் கேட்டும் களிப்படையலாம்.

·        இந்த நவராத்தியின் போது வங்களாத்தில் காளி பூஜையும், உத்திரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களில் ராமலீலையும், மைசூரில் சாமுண்டீஸ்வரி பூசையும் தமிழ்நாட்டில் கமைகள் பூசையும் நடக்கின்றன.

·        கொலு தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு மாலை நேரத்திலும் இளஞ்சிறுவர்கள், பல்வேறு விதமாகத் தன்னை அன்றன்றும் ஒப்பனை (மேக்கப்) செய்து கொண்டு கலை ஒளி வீச, காற் சதங்கை ஒலிக்க, குங்குமச் சிமிழுடன் பிறர் இல்லம் சென்று அழைப்பு நல்கும் காட்சி, நெஞ்சை மயக்கும் வண்ணம் இருக்கும்.

·        உலகங்களையும் உயிரினங்களையும் படைத்தளித்த உலக மாதாவை இந்த ஒன்பது இரவுகளிலும் வழிபடுவது மிகவும் சிறப்புடையது.

·        ஒன்பது இரவுகள் சக்தியாகத் திகழ்ந்தவள், பத்தாம் நாள் சிவத்துடன் சேர்ந்து கலந்து சிவசக்தியாக மாறிவிடுகிறாள்.

·        புராணக் கதைகளில் ராமபிரானின் மூதாதையர்களின் ஒருவர்தான் இவ்விழாவை முதன்முதலில் கொண்டாடியிருக்கிறார்.

·        இந்த நவராத்திரி விரத்த்தை வருஷ ருது தாண்டி சரத் ருதுவான ஐப்பசியில் , வசந்த ருதுவான் சித்திரையில் செய்ய வேண்டும்.

·        இந்த இரு பருவங்களும் காலனுடைய கோரப் பற்களாகும். இவ்விரு காலங்களையும் உயிரினங்கள் கடந்து செல்வது கடினம். நோய்நொடிகள் இக்கால கட்டத்தில் வந்து சேரும். ஆகவே, இக் கொடுமையிலிருந்து உயிர்கள் மீளவே சண்டிகையின் பூசை செய்ய வேண்டும் என்கிறார் ஜனமே ஜெயனிடம் வாசர்.

·        இந்த நவராத்திரி காலங்களில் 9 நாட்களும் ஒன்பது வடிவில் காட்சி தருகிறார் அம்மை

·        வீட்டில் பெரும்பாலும் கொலு வைப்பதற்கு கொலு படிகட்டுகள் வைத்து அதில் 3-5-7-9 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் படிவைத்து அதில் கொலு வைப்பார்கள்.

·        நவராத்திரியின் வழா நாட்களில் ஊசி நூல் கொண்டு தைக்க மாட்டார்கள். வீட்டை ஒட்டடை அடிக்க மாட்டார்கள்.

·        இந்த ஒன்பது நாட்களும் வீடு ஆலயமாகும். நம் மனமோ தெய்வீகமாகும். ஒன்பது நாளைய அருள்வழி பாட்டில் துர்க்கை நம்மீது அருள்வழிப் பாட்டில் துர்க்கை நம்மீது அருளை பொழிவாள்.  அறிவைப் புகட்டுவாள். ஆணவம் போக்கி ஆனந்தம் ஊட்டுவாள்.

·        பக்தி இலக்கியங்களும் பரம பாகவதரும் கூறும் அத்தனை சமய மேன்மைகளும் படியேறி வீடு வரும் நாட்கள் தான் இந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி.

பார்வை நூல்கள்

1. பண்டிகை தரும் பண்பாடு - திருமதி கோ. சாந்தகுமாரி, எழில் நிலா பதிப்பகம், மயிலை, சென்னை -4.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...