ஆவணி அவிட்டம்
பூணூலை வருடத்திற்கு ஒரு மாற்றுவதற்காக ஏற்பட்ட
பண்டிகையே ஆவணி அவிட்டம். அதாவது தாலி பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள்.
ஒருவனுக்கு உரிமையானவள் என்பதையே உணர்த்துகிறது. இத்தாலி அன்றும் இன்றும் வடிவங்கள்
வந்துள்ளதே தவிர, கழுத்தில் ஏதோ ஒரு வடிவில் இருந்திருக்கிறது.
எனவே தாலி என்பது பெண்களின் கழுத்தில் இருந்து
அவர்களை அடையாளங் காட்டிற்றோ அதே போல் ஆடவரையும் பல்வேறு நிலைகளில் இனங்காட்டிட இந்தப்
பூணூல் அணியப்பட்டது.
தாலி அணிந்த பெண்கள் பிறரிடம் எவ்வாறு நடந்து
கொள்ள வேண்டும் என்னும் எல்லை வகுத்த்தோ, அதே போல் பூணூல் அணிந்தவர்கள் பிறரிடம், பிறர்
அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துவதே இப்பூணூலின் முதற் பெருமை.
நம் முன்னோர்கள் விருந்தோம்தலில் மிகவும்
விருப்பம் உடையவர்கள். அதே சமயம் வாணிபம், கல்வி, தூது, நிமித்தமாக ஊர்விட்டு ஊருக்கும்,
நாடு விட்டு நாட்டிற்கும் அந்நாளில் செல்வது அவசியமாயிருந்தது.
தலைவன் இல்லத்தில் இல்லை என்று தலைவி விருந்தினருக்கு
விருந்தளிக்காமல் இருக்கமாட்டாள். தலைவனில்லாத அவ்வேளையில் விருந்தாளியை உடனே வீட்டிற்குள்
வருகை தரும்படி வரவேற்கவும் மாட்டாள். சன்னல் வழியாகவோ அல்லது கதவு இடுக்கின் வழியாகவோ
ஒரு கணம் நோக்குவாள். விருந்தாளியின் உடலில் பூணூல் இல்லையென்றால் வாலிபத்தின் தலைவாசலை
அவன் இன்னும் மிதிக்கவில்லை என்று உணர்ந்து அவனைத் தமது தம்பியாகக் கருதி உபசரிக்க
முற்படுவாள்.
அவ் விருந்தாளியும் ஒற்றை வடத்தில் பூணூல்
அணிந்திருந்தால் வாலிபன் என்றும் மணமாகதவன் என்றும் கண்டுணர்ந்து அதற்கேற்ற எல்லையிலிருந்து
அவனை உபசரிப்பாள்.
விருந்தாளியின் மேல் இரட்டை வடப் பூணூல்
காணப்படுமானால், அவன் திருமணம் நிகழ்வுற்றவன், தங்கைக்கும் தாரத்துக்கும் வேறுபாடு
கண்டுணர்ந்து மாண்புடன் நடப்பவன் என்றும் உணர்ந்து அவனை தமது மூத்த சகோதரனாகக் கருதி
உபசரிப்பாள். விருந்தாளியிடம் மூன்று வடம் பூணூல் காணப்பட்டால் அவரைத் தந்தைக்கு சமமாகக்
கருதி உபசரிப்பாள்.
இத்தகைய நுண்ணறிவுக்கும் முன்னறிவுப்புக்கும்
காரணமாகத்தான் நமது முன்னோர்கள் பூணூல் தரிக்கும் வழக்கத்தையே கடைபிடித்தார்கள்.
எந்த வகுப்பினரையும் பிரித்துக்காட்டுவதற்காகவோ,
பாகுபடுத்திக் காட்டுவதற்காகவே முன்னோர்கள் பூணூல் தரிப்பதை ஏற்படுத்தவில்லை.
பிராமணர்கள் மட்டும் பூணூல் தரிக்கும் பழக்கத்தை
ஏகபோகமாக ஆக்கிக் கொள்ளவில்லை. சத்திரியர்களும், வைசியர்களும் தரித்து வருகிறார்கள்.
பூணூல் அணிபவர்களை இரு பிறப்பாளர் என்று
கூறுவதுண்டு. பூணூலை இருபிறப்பாளர் தம் கடிகை என்கிறார் பரிமேழகர். உபநயனம் என்றால்
மேலும் (உப) கூடுதலாகவும் கண்களைப் பெறுதல் என்றே பொருள்.
ஆவணி அவிட்டத் திருநாளுக்கு அடுத்த நாள்
வரும் காயத்ரி ஜெபம் உன்னதமானது. இம் மந்திரத்திலுள்ள 24 எழுத்துக்களும் எல்லா தேவதைகளையும்
சுட்டி நிற்பதால் அனைத்துத் தேவதைகளின் அருளையும் பெறுவதற்கு இது உரியதாகிறது.
மேலும், இந்நோன்பிற்காகச் செய்யும் கொழுக்கட்டை
(உப்பு) சிவ அம்சத்தையும், கார அடை (தித்திப்பு) சக்தி அம்சத்தையும் குறிக்கிறது. கணவனுக்கு
அடையையும் மனைவிக்குக் கொழுக்கட்டையும் வழங்குவதன் உட்பொருள் என்னவென்றால், இல்லற வாழ்வில்
இருவரும் இணைந்தொளிர வேண்டும் என்பதே ஆகும்.
”உருகாத வெண்ணெயும்
ஓரடையும் நான் வைத்து
ஒரு நாளும் என் கணவனைப்
பிரியாமல் இருக்க வேண்டும்...”
என்று இந்தியத் திருநாட்டின்
பல பாகங்களிலும் பெண்கள் இவ்வேண்டுதலைக் கூறி தமது கரங்களிலும் மஞ்சள் சரசு அணிந்து
கொள்கிறார்கள்.
ஈசுவரனைப் பிரிந்திருந்த அம்பாள் ஒரு சமயம்
அஞ்ஞானத்திற்கு உள்ளானாள். பிறகு பூசை செய்தாள், நிவேதனம் செய்தாள். அதன் பின்பு ஈசுவரனை
அடைந்து இன்புற்றாள்.
இந்த விரதத்தை அம்பாள் மேற்கொண்டது மாசியும்
பங்குனியும் கூடும் சமயத்தில். அதன் காரணம் கருதியே பெண்கள் இந்நோன்பை அதே திங்களில்
கொண்டாடி மங்கல மங்கையாராகத் திகழந்திட ஆண்டுதோறும் பராசக்தியைப் போற்றி வணங்குகிறார்கள்.
பார்வை நூல்கள்
1. பண்டிகை தரும் பண்பாடு - திருமதி கோ. சாந்தகுமாரி, எழில் நிலா பதிப்பகம், மயிலை, சென்னை -4.
Comments
Post a Comment