Skip to main content

கணவன் மனைவி உறவின் மகத்துவம்

 

கணவன்  மனைவி உறவின் மகத்துவம்

 

        கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்போதுதான் அவர்கள் நல்ல பெற்றோர்களாக இருக்க முடியும். இல்லற வாழ்க்கையில், இல்லற உறவில் மனைவியின் பங்கு அதிகம். மனைவி, தலைவியாக, அமைச்சராக, ஆலோசகராக, அடியாளாக, தோழியாக எனப் பலவிதப் பொறுப்புகளை வகித்து குடும்பத்தைக் கோயிலாக்கக் கூடிய சக்தி படைத்தவளாகிறாள். அத்தகைய மனைவியின் உணர்வினை மதித்தவர்கள் வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.

·                      அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்ஸன் திருமணமான போது கல்வி அறிவு இல்லாதவர். திருமணத்திற்குப் பிறகுதான் மனைவியின் ஊக்கம் அவரை உயர்பட்டம் பெறவைத்தது. ஜனாதிபதியாக உங்களால் முடியும் என்ற உணர்ச்சிமிக்க வார்த்தைகள் ஜனாதிபதியாக்கியது.

·                   ஷாஜஹான், மும்தாஜ் உள்ள காதலால் உலக அதிசய தாஜ்மகால் உருவானது என்று கூறப்படுகிறது. ஷாஜஹானுக்குக் குழப்பமான பல சூழ்நிலைகளில் காப்பாற்றிய அந்த உண்மை உறவின் நன்றிக்காக எழுப்பப்பட்டதே அந்த நினைவாலயம்.

·                                  அறிவாளி சர்ச்சிலுக்கு அந்தரங்க ஆலோசகர் அவர் மனைவி. இன்று விளங்கும் ஃபோர்டு காரை உருவாக்கிய ஹென்றி ஃபோர்டு, எடுத்த முயற்சி, ஆராய்ச்சிகள் தோல்வியுற்று இழப்பு ஏற்பட்ட போது, உற்றார், உறவினர் கேலி செய்து புத்தசாலித்தனமாகத் தொழிலை மாற்ற ஆலோசனை கூறினர். மனைவி தந்தத் தளராத ஊக்கமே அவரைத் தலை நிமிர வைத்தது.

         ஆனால் இன்று புரட்சிப் பெண்கள் தனிப்பட்ட முறையில் தனியாகச் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். ஆண்களைச் சார்ந்திருக்கக் கூடாது எனத் தவறாகக் கருதுகிறார்கள். இரண்டு சக்கரங்கள் இணைந்து சுழன்றால்தான் வண்டி நன்றாக ஓடும். அதுபோல் கணவன், மனைவியைச் சார்ந்து வாழும்போது தெய்வீகம் பிறக்கிறது. Husband and Wife neither dependent or independent but interdependent. இதைப் புரிந்து கொள்ளும்போதுதான், தான் என்கின்ற ஆணவமும் ஏற்படாது, நாம் என்கின்ற ஒற்றுமை உறவு ஏற்படும்.

          மதுரை மீனாட்சி, ஆண்களை வெல்லப் புறப்பட்டு வழி முழுவதும் வெற்றி பெறுகிறாள். கைலாய மலையில் சிவனைக் கண்டவுடன் அமைதி பெறுகிறாள். மன்மதனை எரித்து, அவரின் கரும்பு வில்லை வென்ற சிவபெருமான் பார்வதியிடம் அமைதியுற்று, வென்ற கரும்பை பார்வதிக்கும் பரிசாகக் கொடுக்க இராஜராஜேஸ்வரியாகிறார். ஆகவே பார்வதி, சிவன் ஒருவரிடம் ஒருவர் தோற்றார்களா? இல்லை வென்றார்கள் என்பதுதான் உண்மை. இதுதான் கணவன் மனைவி உறவின் உண்மை ரகசியம்.

          வெளிநாடுகளில் காதலித்து முடிந்தபின் திருமணம் செய்கிறார்கள். அத்திருமணத்தின் ஆயுள் தெரியாது. நமது நாட்டின் இல்லறப் பெருமையே திருமணத்திற்குப் பின் காதல் தொடங்குகிறது. கணவன், மனைவி இருவரிடம் உள்ள, உள்ள உணர்வுகளை உணர, உணர, அன்பும் இன்பமும் மேலோங்குகிறது. அந்தப் புனித அன்பால் நாளடைவில் உடல் மறைந்து, உருவம் மறைந்து உள்ளம் மட்டும் எஞ்சி நிற்க உறவுகள் உயர்ந்து நிற்கிறது.

          ”ஒருவர் தென்றலாகும் போது, மற்றவர் மலராவார்

          அங்கு வாழ்க்கை மணம் வீசும்

          ஒருவர் பாடலாகும்போது மற்றவர்

          புல்லாங்குழலாவார் அங்கு இசை பிறக்கும்

          ஒருவர் கல்லாகும்போது மற்றவர் உளியாவார்

          அங்குச் சிற்பம் உருவாகும்”

இதனால் நமது நாட்டு தெய்வீகத் திருமண உறவு, இனிமையாக இறுதி வரை வாழ்கிறது. கணவனோ, மனைவியோ உணர்ச்சி மிக்க உறவால் பழகும்போது வாழ்க்கை வழுவழுப்பாகிறது. தண்ணீர், பாறையைக் காட்டிலும் மென்மையானது. ஆனால் அத்தண்ணீர் இடைவிடாத இயக்கத்தால், சொரசொரப்பான பாறையின் முகத்தைக்கூட வழுவழுப்பாக்கிவிடும். இத்தகைய உண்மையான, உணர்ச்சி மிகுந்த உறவாகக் கணவன், மனைவியின் உறவு இருக்கவேண்டும்.

          நபிகள் நாயகம் இடதுகைத் தண்ணீர் வலது கையையும், வலது கைத்தண்ணீர் இடது கையையும் கழுவுவது போல் இருக்க வேண்டும் என்கிறார். அவர்கள் இருவரும் இணைந்து பிள்ளைகளுக்கு, குடும்பத்துக்கு, உலகுக்கு உதவ்வேண்டும். இப்படிப் பிறருக்காக வாழ்வதே இல்லற உறவாகும்.

 

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...