Skip to main content

பிள்ளைகளின் எதிர்காலம்?


         

   ஒரு நாட்டின் எதிர்காலம், சிறப்பாக இருக்கவேண்டுமானால், முதல் தேவை, வளரும் தலைமுறைகள், நாட்டின் வருங்காலத் தூண்கள். அவர்கள் ஒழுக்கத்துடனும், அனைத்துப் பண்பு நலன்களுடனும் இருக்க வேண்டும். அதற்கு அடிப்படை தேவை, ஒற்றுமையான, பொறுப்பான பெற்றோர்கள், கட்டுப்பாடான குடும்பம், அன்பான பிணைப்பு.

      மருத்துவ ஆய்வில், குழந்தைகளின் நல்ல மனப்பான்மைக்கு முதலில் பெற்றோர் கவனம், இரண்டாவது, முதல் பெரிய குழந்தை, அடுத்தக் குழந்தைக்குப் பாதுகாப்பு, பராமரிப்புத் தருவது. ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால் “Parental Care, Child to Child Care” என்பதே. இதனால் பெற்றோரின் ஒற்றுமையான, கலாச்சார கட்டுப்பாட்டுடன், பாசம் கொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் தான் தாம் தேவை என்பதை மேலைநாட்டு மக்கள் உணர்ந்து அதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைத்தார்கள்.

          நம்மைக் கண்டு, பாடம் பெற்று வருகின்றன மேலைநாடுகள். ஆனால் நாம் இந்த முப்பது வருடத்தில் மேலைநாடுகளைப்போல நாகரிகம் பெற்றுவிட்டோம். ஆனால் இன்றையக் காலக் கட்டத்தில் நாம் குழந்தைகளை வளர்க்கும் விதத்திலும், கல்வியைக் கற்பிக்கும் முறையிலும் சற்று சிந்திக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

ஆதிகாலக் கல்வி முறை

 ஆதிகாலத்தில் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வந்தவுடன், கல்வி கற்கவேண்டும் என்கின்றபோது குருகுலக் கல்வியைப் பெற்றனர். குருகுலக் கல்வியில் வீட்டைவிட்டு ஆசிரமத்திற்குச் சென்று கல்விக் கற்க வேண்டும். குரு கல்வியை மட்டுமல்ல, சிறந்த ஒழுக்கத்தையும், பண்பையும், பணிவையும், அடக்கத்தையும், ஆற்றலையும், நல்ல பழக்கவழக்கங்களையும், கலைகளையும் போதிப்பார்.

 அரசக் குடும்பத்தாராக இருந்தாலும், சுகபோகங்களை விட்டு குருவின் சாதாரண குடிலில் குருகுல வாசமிருந்து அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீராடி, இறைவனை வணங்கி, குருவுக்கு பணிவிடை செய்து, ஆசிரம வேலைகளைச் செய்து, எளிய ஆரோக்கியமான இயற்கை உணவை உண்டு, சக மாணவர்களுடன் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி ஒன்றாக வாழ்ந்து, அனைத்துக் கலைகளையும் கற்று நல்ல குடிமகனாக, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நல்ல குடிமகனாக வீடுவந்து சேருவான். ஆகையால் பெற்றோரைவிட குருவையே உயர்வாக குறிப்பிடுவதுண்டு. இராமகாதையில் கூட இராமனின் உயர்வைக் குறிப்பிடும்போது குருவான வசிஷ்டரையே மேற்கோளாகக் கூறுவர்.

நம் முந்தைய தலைமுறையில் சான்றோர்கள், ரா.பி.சேதுப்பிள்ளையின் மாணவன், மு.வ. வின் மாணவன், இலக்குவனாரின் மாணவன் என்று தன் ஆசிரியர் பெயரைக் கூறிப் பெருமைக் கொண்டனர். ஆகையால், அக்காலப் பிள்ளைகள், அனைத்துப் பண்புநலன்களையும் கொண்டு விளங்கினர். அதனால் குடும்பத்தில் குழப்பம் இல்லை. ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பும் N.C.C, A.C.C., என்ற கட்டாயப் பயிற்சி பெறவேண்டும். அந்தப் பயிற்சியில் கிராமப்புறத்தில் முகாம்களில் வாழ்ந்து அவரவர் வேலைகளை அவர்களே செய்யவேண்டும். பொதுச் சேவை செய்வது, தெருவைப் பெருக்கி பாமர மக்களுக்குச் சுகாதார விதிகளைப் போதித்து உலகை அறிந்து கொள்ள, ஏழைகளின் நிலையைத் தெரிந்து கொள்ள பரந்த மனம் ஏற்பட வாய்ப்புகள் இருந்தது. இப்பொழுது இம்முறை கட்டாயக் கல்வியாக இல்லை.

சிங்கப்பூரில் இன்றும் இது கட்டாயப் பயிற்சியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளிக் கல்வி முற்றுப் பெற்ற பின் இரண்டு வருடம் இப்பயிற்சி பெற்று, வெற்றிப் பெற்ற பின்தான் உயர்கல்வி பெறமுடியும். வேலையில் சேர முடியும் என்ற சட்டமே உள்ளது. இந்த நிலை ஒரு குழந்தை சகல பண்புகளையும் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது.

இன்றைய கல்வி நிலை

  நம்நாட்டில் அப்பெரும் பொறுப்பை ஏற்றுக் கொள்பவர்கள் பெண்களே. ஏனெனில் பெண்கள் கனிவு, கண்டிப்பு, மனப்பக்குவம், பொறுமை, சகிப்புத் தன்மை போன்ற குணங்கள் இருப்பதால் தமிழக அரசு மழலையர் பள்ளிகளில் பெண்கள்தான் ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்ற சட்டமே கொண்டு வந்தது.

 இக்காலக்கட்டத்தில் கல்வி என்பது ஒரு வியாபாரமாக உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு துறையில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளார்கள். தமிழ், ஆங்கிலம், அறிவியல், கனிணி, வரலாறு, என்று ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுடன் ஒரு நாளில் ஒரு மணிநேரம் தான் உடன் இருக்கிறார்கள். அதிலும் மதிப்பெண் அடிப்படை என்பதாலும், வகுப்பில் அறுபது, எழுபது மாணவ, மாணவர்கள் இருப்பதாலும் எந்த அளவு மாணவர்களைக் கண்காணிக்க முடியும். ஆகவே இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தை நல்ல அறிவோடும், நல்ல பண்போடும், நல்ல கல்வியோடும் அமையப் பெற்றோர்களின் பங்கு தான் அதிகம்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நன்மை என்ற நோக்கத்தோடு செய்யும் செயல்கள் அனைத்தும் அவர்களுக்குச் சுமையாக உள்ளது.

· இன்றைய கல்வி முறையில் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அனைத்து மேற்கல்விகளுக்கும் நுழைவுத் தேர்வு வைப்பதும், அக்குழந்தைகளுக்கு அந்தந்த வயதில் அனுபவிக்கும் இனிய மகிழ்ச்சியைத் தொலைத்துக் கொண்டு உள்ளார்கள்.

·    பள்ளி பருவத்தில் மதிப்பெண்களைப் பெறுவதற்காக நாள் முழுவதும், பள்ளி, டியூசன் சென்டர், கோச்சிங் கிளாஸ், என்று மாணவர்கள் செல்வதால், பெற்றோர்களிடமும், சக மாணவர்களிடமும் மகிழ்ச்சியாகப் பேசியும், சிரித்தும் விளையாடியும் பொழுதைக் கழிக்க முடிவதில்லை.

· பெற்றோர்களும் குழந்தைகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். தங்கள் விருப்பத்தைக் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது.

· பெற்றோர்கள் குழந்தைகளிடமும், பிள்ளைகள் பெற்றோர்களிடமும் மனம் விட்டு பேசவேண்டும்.

·       பழங்காலத்தில் இருந்தக் கூட்டுக்குடும்பமுறை இருக்க வேண்டும். குழந்தைகள் பாட்டி, தாத்தா, பெரியப்பா, பெரியம்மா, அண்ணன், தம்பி என்று உறவுமுறை கொண்டு கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும். அப்பொழுது   குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல், பலாத்காரம் போன்றக் கொடுமைகள் நிகழாது.

நிறைவாக,

 ”எந்தக் குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

          அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே”

என்று கண்ணதாசன் பாடலில் உள்ளது போல் நாம் வளர்க்கும் வளர்ப்பினில் தான் உள்ளது.

      குழந்தைகளின் எதிர்காலம் பெற்றொர்களின் நினைவில். பெண்குழந்தைகளை நாம் எவ்வாறு பொறுப்புடன் வளர்க்கிறோமோ, அதே போல் ஆண் குழந்தைகளிடமும் பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும். மதிப்பு குடுக்க வேண்டும் என்பதை மனதில் பதிய வையுங்கள். இனி வரும் காலங்களில் மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நம்முடைய பாதுகாப்பில் நம்முடைய அருகிலிருக்கும் பள்ளியில் படிக்க வைத்து குழந்தைகளின் உயிரையும், உடலையும், மனதையும் பாதுகாப்போம். அது நம் ஒவ்வொரு பெற்றோரின் கையில்.  கண்ணீரில் அல்ல...

 

  

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...