மங்கையர் பருவம் என்பது செல்லப் பருவம் தாண்டி, அறிவு வளர்ந்த மங்கைப்
பருவம். இனியும் குழந்தையல்ல. அனைத்துக் குணநலன்களையும்
கொண்டு Maturity அடைந்து வாழ
வேண்டும். பொறுப்பு. கடமை, உரிமை இவைகளை
உணர்த்தும் விதமாக இச்சடங்குகள் செய்யப்படுகின்றன. தாய்மாமன் மூலம் இக்கௌரவம் வழங்கப்படுவதாக அமைகிறது.
மஞ்சள் (Antiseptic), வேப்பிலையைப்
போட்டு ஊறவைத்து அந்நீரால் குளிக்க வைப்பார்கள். இலைகள் தலையில் விழாத வகையில், ஆரோக்கியத்திற்கேற்ப செம்பு சல்லடை வைத்து அதன்வழி ஊற்றுவார்கள். முதன்முதலில்
ஊற்றும்போது அதில் நவமணிகளால் ஆன நகைகள், தங்கம், வெள்ளி என மருத்துவ குணங்கள் நிறைந்த நகைகளில் படுமாறு நீர்
ஊற்றுவார்கள். இதனை மஞ்சள்
நீராட்டு விழா என்பர்.
மேலும்
உடலில் உள்ள மாறுதல்களின் விளைவைச் சமன் செய்ய புரதச்சத்து உணவுவகைகளைக் கொடுப்பார்கள். காலையில் வெறும்
வயிற்றில் முட்டை, நல்லெண்ணெய், கொடுப்பார்கள். உழுத்தங்களி. சிவப்பு புட்டரிசி, பருப்பு சாதம்
போன்றவற்றை உண்ணத் தருவதால் இடுப்பிற்கு வலுவைத் தருவதாக அமையும். இச்சமயத்தில் அக்கறைக் கொண்டு கவனிக்காவிட்டால் பின்னாளில் பலவித உடல்
கோளாறுகள் ஏற்படும். காமாட்சி விளக்கு உணவிற்கு அடிப்படையான விதை நெல், தீய சக்திகளை
அண்டவிடாது தடுக்கும் இரும்பு, நமது அடிப்படை உணவான அரிசியில் செய்யப்படும் அடை இவற்றைக் கொண்டு சுற்றி, பின் கடலில் கரைத்து விடுவார்கள்.
இவ்வாறு
நமது நாட்டில் நம் முன்னோர்கள் செய்த அனைத்துச் சடங்குகளும் அறிவியலின் அடிப்படையில்
ஏற்பட்டது. எனவே அதனை நாமும்
கடைபிடித்துப் பயன்பெறுவோமாக.
Comments
Post a Comment