பாம்பும்
ஆறு சமயங்களும்
நாகப் பாம்பு ஆறு சமயப் பரம்பொருள்களுடன்
தொடர்பு கொண்டுள்ளது. அத் தெய்வங்களை வழிபடுகின்றவர்கள் பாம்புகளையும் வழிபடுகின்றார்கள்.
பூக்களுடன் பிணைந்த பூ கதம்பமாகப் பொலிவு பெறுகின்றது.
·
காணபதியம் – கணபதியின் ஆயுதமாகவும், கச்சாகவும், குடையாகவும் இருப்பது
பாம்பு.
·
சைவம் – சிவனுக்குப் பாம்பு அணிகலனாகவும் ஆயுதமாகவும் பயன்படுகிறது.
பாம்பு குடை பிடிக்க விளங்கும் லிங்கம் ‘நாகலிங்கம்’ இதே வடிவத்தில் அமைந்த அற்புதமான
ஒரு பூ நாகலிங்கப் பூ.
·
வைஷ்ணவம் – ஆதிசேடன், விஷ்ணு படுத்தால் படுக்கையாகிறது; சாய்தால்
அணையாகிறது; இருந்தால் ஆசனமாகிறது; நடந்தால் குடையாகிறது; மரவடியாகிறது.
·
சாக்தம் – சக்தியின் ஒரு வடிவமாகப் பாம்பு கருதப்படுகிறது. மேலும்
பெண் தெய்வங்கள் பலருக்குக் குடையாக விரிந்திருப்பதும் பாம்புதான்.
·
சௌரம் – கிரகண காலத்தில் சூரியனையே விடுங்கி உமிழக்கூடிய பேராற்றலும்
பாம்புக்கு உண்டு.
·
கௌமாரம் – முருக வழிபாட்டிற்குப் பாம்பு வழிபாடே ஆதாரம் என்பர். மலைப்
பகுதிகளில் மிகுதியாக இருப்பது பாம்பு. அந்த மலைப் பகுதிகளுக்குத் தலைவன் முருகன்,
சஷ்டியில் முருக வழிபாடும், பாம்பு வழிபாடும் சிறப்பாக நடைபெறுகின்றன. ‘சுப்புராயுலு’,
சுப்பிரமணி’ என்ற பெயர்களால் முருகனையும் பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் நாகத்தையும், சுப்பிரமணியையும் இணைத்து வழிபடும் நாக சுப்பிரமணியர்
வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
பார்வை நூல்
1.
இலக்கியங்களில்
வழிபாடுகள் – டாக்டர்.டி.செல்வராஜ், அமராவதி பதிப்பகம், சென்னை 600 004.
Comments
Post a Comment