அரசமரம் – விநாயகர் – பாம்புக்கல் வழிபாடு
அரசு, வேப்ப மரங்களை இணைத்தும் பிணைத்தும் அவைகளுக்குத் திருமணம் செய்கின்றனர்.
இத்திருமணம் வைதிக முறைப்படி நடைபெறுகிறது. அரசு - ஆண்; வெப்பத் தன்மையுடனும், வேம்பு
- பெண்; குளிர்ந்த தன்மையுடனும் காற்றைத் தருகின்றன. இவை மருத்துவக் குணமுடைய மூலிகை
மரங்கள்; மகளிரின் மலட்டுத் தன்மையை அறவே நீக்கும் மருத்துவ ஆற்றல் உடையவை.
‘அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாள்’ என்ற பழமொழியை எல்லாரும் அறிவார்கள்.
அரசன் = அரச மரம். அரச மரத்தை வழிபட்டு வலம் வந்தால் நிச்சயம் மகப்பேறு கிடைக்கும்
என்று நம்பி, புருஷனை விரட்டிக் கைவிட்டாளாம் ஒரு பெண்! உண்மைதான். மகப்பேறு தரும்
அரச மரத்தின் ஆற்றலை இப்பழமொழி காட்டுகின்றது.
ஓர் அகன்ற மேடையின் மீது, அரசு, வேப்பமர நிழலில், விநாயகர் சிலையும், பாம்புக்
கல்லும் நிறுவப்பட்டிருப்பதைப் பல கோயில்களில் காண முடியும்.
பாம்புக் கல்லில் இணைந்துள்ள பாம்புகளைப் போல தம்பதிகள் அரவணைக்க – புணரவேண்டும்.
பாம்புக் கல்லை வணங்கி வழிபட்டால் நாக தோஷம் முதலிய பல தோஷங்கள் விலகும். விநாயகர்,
பாம்புகளின் அருளாலும், அரசு, வேப்ப மரங்களின் மருத்துவ ஆற்றல்களாலும் மகப்பேறு கிடைப்பது
உறுதியாகும்.
மகளிர், வைகறையில் குளிர்ந்த நீராடி, அரசு மரமேடையைத் தினமும் ஏழு முறை வலம்
வந்து வழிபடவேண்டும். சிலர் மகப்பேற்றுக்காக்க் கடும் விரதம் காத்து, 108, 216,
324, 432 முறை வலம் வருகின்றனர். இந்த வழிபாடு அனைத்தும் மகளிர்க்கு உரியது. மகப்பேறு
அடைவதை மட்டும் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டது.
பார்வை நூல்
1.
இலக்கியங்களில்
வழிபாடுகள் – டாக்டர்.டி.செல்வராஜ், அமராவதி பதிப்பகம், சென்னை 600 004.
Comments
Post a Comment