என் எண்ணச் சிதறல்கள் ! (3) Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக் கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும் தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1. தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2. வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3. படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...
ஆ தீண்டு
குற்றி
பசுக்கள் தம் உடம்பில் தோன்றும் தினவை இதமாக
உராய்ந்துச் சுகமாகத் தணித்துக் கொள்வதற்கு வசதியாக, அவை மேயும் மந்தை வெளியில் ஒரு
நீண்ட கருங்கல்லை நட்டு வைப்பார்கள். இக்கல்லை ‘ஆ தீண்டு குற்றி’ அல்லது ‘ஆ தீண்டு
கல்’ அல்லது ‘ஆ உறிஞ்சி தறி’ என்று அழைத்தனர்.
இதனை நாட்டுவது மிகச் சிறந்த தருமச் செயலாக மதிக்கப்பட்டது. பசுக்களின் தினவைத் தணித்துக்
கொள்வதற்கும் ஒரு தருமச் செயல் ஆகும்.
பார்வை நூல்
1.
இலக்கியங்களில்
வழிபாடுகள் – டாக்டர்.டி.செல்வராஜ், அமராவதி பதிப்பகம், சென்னை 600 004.
Comments
Post a Comment