அபிடேகத்திற்குரிய
கருவிகள்
இறைவனுக்கு அபிடேகம் செய்யக் கல், பித்தளை,
செம்பு, வெள்ளி, பொன் முதலிய பொருள்களால் ஆனது.
·
பீடங்கள் – பல தலங்களில் கோமுகத்துடன் கூடிய அபிடேக உலோகப் பீடங்கள்
இருக்கின்றன. தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப் பெரிய அலங்காரமான
அபிடேகப் பீடம் இருப்பது குறிக்கத்தக்கது.
·
ஏக தாரை – ஒரே துவாரமுடைய குவளை
·
சத தாரை – நூறு துளைகளைக் கொண்ட சல்லடை.
·
சகஸ்ர தாரை
– ஆயிரம் துளைகளைக் கொண்ட சல்லடை. இதனைத் திருமால் ஆலயங்களில்
‘சோணாயிரம் கொண்டு’ என்பர்.
·
சங்கு – 108 அல்லது 1008 சங்குகள்.
·
மடி சங்கு – நீரொழுகும் சிறு சிறு தூம்புகளைக் கொண்ட பசுவின் மடி போன்ற
சங்கு; அபூர்வமானது.
·
கமண்டலம் – உலோகம் அல்லது வில்வக் காயால் செய்யப்பட்ட கெண்டி.
·
கோ சிருங்கம் – கொம்பு, பசுவின் கொம்பினது நுனிப் பாகத்தில் துளை செய்து,
அங்கே பொன் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய பசுவில் தலையை இணைத்து அமைக்கப்பட்ட
கருவி.
·
யானைத் தந்தம் – யானைத் தந்தத்தின் நுனிப் பாகத்தில் துளை செய்து, அங்கே
பொன் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய யானைத் தலையை இணைத்து அமைக்கப்பட்ட கருவி.
·
காண்டமிருக
சிருங்கம் – காண்டாமிருகத்தின் மூக்கில் அமைந்த கொம்பினைத் துளையிட்டுச்
செய்த கருவி; இதுவும் அபூர்வமானது.
·
கலசங்கள் – 9 அல்லது 108 அல்லது 1008 கலசங்கள்.
·
மஞ்சனக் குடங்கள் – அபிடேக நீரைச் சேமிக்கவும், முகக்கவும் பயன்படுகின்ற உலோகக்
குடங்கள்.
பார்வை நூல்கள்
1.
இலக்கியங்களில்
வழிபாடுகள் – டாக்டர் டி. செல்வராஜ், அமராவதி பதிப்பகம், சென்னை – 600 004.
Comments
Post a Comment