வணங்கும் முறைகள்
கோயிலுக்குள் இறைவனை வணங்கும் முறைகள் இரண்டு வகைப்படும். 1. நின்று வணங்கல்,
2. கிடந்து அல்லது விழுந்து வணங்கல் என்பன.
திரியாங்கம்
தலைக்கு மேல் இரு கைகளைக் குவித்து, நின்று
வணங்குவது. இது எல்லோர்க்கும் உரியது.
தெய்வம், துறவிகள், முனிவர்கள் முதலியவர்களை
வணங்கும்போது தலைக்கு மேலும், பெற்றோர் ஆசிரியர் முதலியவர்களை வணங்கும்போது முகத்துக்கு
நேரும், உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் முதலியவர்களை வணங்கும்போது கழுத்துக்கு
நேரும் கைகளைக் குவித்து வணங்குவது முறை என்பர். கைகள் குவிந்திருக்கும் போது தலை தாழ்ந்திருக்க
வேண்டும்.
பஞ்சாங்கம்
தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு ஆகிய ஐந்து
அங்கங்களும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குவது பஞ்சாங்க வணக்கம். இது பெண்களுக்கு
உரியது.
அட்டாங்கம்
தலை, கை இரண்டு, காது இரண்டு, தோள்கள் இரண்டு,
மேவாய் ஆகிய எட்டு அங்கங்களும் நிலத்திலே பொருந்தும் படி கிடந்து வணங்குவது அட்டாங்க
வணக்கம். இந்த வணக்க முறை சற்றுக் கடினமானது. அதிக வழக்கத்தில் இல்லாதது. ஆண்களுக்குரியது.
சாஷ்டாங்கம்
சக+அஷ்ட+அங்கம்,தலை, காது இரண்டு, மார்பு,
கை இரண்டு, கால்கள் இரண்டு ஆகிய எட்டு அங்கங்களும் நிலத்திலே பொருந்தும்படி விழுந்து
வணங்குவது அஷ்டாங்க வணக்கம். இது ஆண்களுக்குரியது.
சாஷ்டங்க வணக்கத்தைத் ‘தண்டமிடுதல்’ என்று
தமிழில் கூறுகின்றனர். எந்த ஆதாரமும் இல்லாத தண்டம். (தடி) எப்படி நிலத்திலே விழுந்து
விடுமோ அப்படி நிலத்திலே விழுந்து வணங்குவது ‘தண்டமிடுதல்’ ஆகும். ஆதரவற்ற தடிக்கு
நிலமே அடைக்கலம்; ஆதரவற்றவர்களுக்கு இறைவனே அடைக்கலம் என்ற உட்பொருளைச் சாஷ்டங்க வணக்கம்
உணர்த்துகின்றது.
·
பஞ்சாங்க, அட்டாங்க
வணக்கங்களைக் குறைந்தது மூன்று முறை செய்ய வேண்டும். ஒரு முறை இரு முறை செய்வது குற்றம்.
·
நிலத்தில் படிந்து
வணங்கும் போது மூர்த்தங்களை நோக்கிக் கால்களை நீட்டக் கூடாது.
·
கொடி மரத்திற்கு
அருகில் பஞ்சாங்கமாக, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கலாம். கோயிலின் வேறு எந்தப் பகுதியிலும்
விழுந்து வணங்கக் கூடாது. காரணம், எந்த மூர்த்தத்தை நோக்கியாவது கால்களை நீட்ட வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
·
கோயிலுக்குள்
நுழைந்தவுடனும், வழிபாடுகளை முடித்துக் கோயிலை விட்டு வெளியே வரும் போதும் கொடி மரத்தருகில்
விழுந்து வணங்க வேண்டும். வேறு எப்போதும் விழுந்து வணங்கக் கூடாது.
·
தெய்வங்களைத்
திரியாங்க முறையில் கைகளைக் குவித்து நின்று வணங்க வேண்டும். மற்ற நேரங்களில் கைகளை
மார்பிலே அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கோயிலில் கைகளைத் தொங்க விட்டு நடப்பதும்,
வீசிக் கொண்டு நடப்பதும் குற்றங்களாகும்.
·
கோயிலில் தெய்வத்தைத்
தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது. கோயிலில் அனைவரும் சமம்.
·
கொடி மரத்தருகில்
விழுந்த வணங்கும்போது,
கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய சன்னிதியானால், வடக்கே தலை
வைத்து வணங்க வேண்டும்.
தெற்கு அல்லது வடக்கு நோக்கிய சன்னிதியானால், கிழக்கே தலை
வைத்து வணங்க வேண்டும்.
புண்ணியத் திசைகளாக மதிக்கப்படுகின்ற கிழக்கு, வடக்குத் திசைகளை
நோக்கிக் கால்களை நீட்டி எப்போதும் வணங்கக் கூடாது.
பார்வை நூல்
1.
இலக்கியங்களில்
வழிபாடுகள் – டாக்டர்.டி.செல்வராஜ், அமராவதி பதிப்பகம், சென்னை 600 004.
Comments
Post a Comment