மதுரை சென்ற அனுபவங்களாக ... ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...
மிலாது
நபி
நபிகள் நாயகம் பிறந்த நாளைத்தான் மிலாது
நபி என்று முகம்மதியர்கள் கொண்டாடுவார்கள். மிலாது நபி பண்டிகையன்று பள்ளிவாசலில் சிறப்புப்
பண்டிகையன்று பள்ளிவாசலில் சிறப்புப் பிரார்த்தனை செய்வார்கள். ஏழைகளுக்கு லுங்கி மற்றும்
ஆடைகள் வழங்குவார்கள். இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் ஆள் வைத்து பிரியாணி
செய்து ஏழைகளுக்கு வழங்குவார்கள். அன்று மாலை ஊர்வலமாக சென்று சிறப்புப் பிரார்த்தனையும்,
நபிகள் நாயகம் சொன்ன, ‘நாம் எல்லாரும் சகோதரர்கள், எல்லாரும் ஒற்றுமையாக இருக்க
வேண்டும்’ என்பது போன்ற நல்ல கருத்துக்களை கூட்டத்தில் சொல்லி அதன்படி எல்லாரும்
இருக்க வலியுறுத்துவார்கள்.
பார்வை நூல்
1. இந்திய நாட்டின் பண்டிகைகள், தேஜஸ்ஸ்ரீ, இந்திய நாட்டின் பண்டிகைகள், ஐந்திணை பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
Comments
Post a Comment