Skip to main content

பிரத்யங்கரா தேவி

 

பிரத்யங்கரா தேவி

          பிரகலாதனுக்கு தந்தை இரணிய கசிபு எனும் அரக்கன். அவன் தன்னையே எல்லாரும் வணங்க வேண்டும் என்று துன்புறுத்தினான். வேறு தெய்வத்தை வணங்குபவர்களை சிரசேதம் செய்வான். அவன் மகனான பிரகலாதன் எப்போதும் ‘ஹரி ஓம்’ என்று மகா விஷ்ணுவை வணங்குவான். இது இரணியனுக்கு பிடிக்காததலால் தன் பிள்ளையையே கொல்லத் துணிந்தான். ஆனால் அவனை கொல்ல முடியவில்லை.

          இரணியன் ஆண், பெண், தேவர்கள், மூவுலகம், (தரை, ஆகாயம், தண்ணீர்) சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகர், காளி போன்ற எல்லா தேவதைகள் யாராலும் எதனாலும் கொல்லப்படக் கூடாது என்ற வரத்தைப் பெற்றவன். அதனால் யாராலும் தன்னைக் கொல்ல முடியாது என்ற மமதையால் எல்லாரையும் தன்னை தெய்வமாக வணங்கச் செய்தான்.

       ஒருநாள் – தன்மகன் எதிரில் வந்தபோது அவனை ‘நீ யாரை வணங்குகிறாய?’ என்றான். நான் ‘ஹரியைத்தான் வணங்குகிறேன்’ என்றான். அப்படியா? அந்த ஹரி எங்கும் நிறைந்தவரா? என்றான்.

         ‘ஆமாம் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’ என்றான் பிரகலாதன்.

          அப்படியா! இந்த தூணில் கூட இருப்பாரா? என்று ஏளனமாகக் கேட்டு காலால் உதைத்தான். தூண் இரண்டாகப் பிளந்து, அதிலிருந்து சிங்க முகத்துடன் எட்டுக் கைகளுடன் நரசிம்மர் வெளியே வந்தார். வாசற்படியில் இருந்தபடியே இரண்யனை இரண்டாகப் பிளந்து அவன் குடலை மாலையாகப் போட்டுக் கொண்டு உக்ரமான கோபத்துடன் இருந்தார்.

          இரண்யன் வரம் கேட்டபோது வாசற்படியை விட்டு விட்டான். அதனால் வாசற்படியில் அமர்ந்து இரண்யனைக் கொன்றார். தேவ உருவமும் சிங்க முகமும் கொண்டு அவனை அழித்தார். வாசற்படியில் எப்போதும் தலை வைத்து படுக்கக் கூடாது. படுப்பவர்களுக்கும் ஆபத்து! லஷ்மியும் உள்ளே வரமாட்டாள்!

  இரண்யனை கொன்ற உடன் நரசிம்மரின் கோபம் தணியவில்லை. தேவர்கள் வேண்டினார்கள். வேதங்கள் முழங்கினார்கள். எதற்கும் கோபம் தணியவில்லை. ஆனால் பிரகலாதனை தன் மடிமீது அமர்த்திக் கொண்டார்.

          சிவனிடம் முறையிட்டனர். சிவன் பாதி உருவம் யாளியாகவும் பாதி சிங்க முகத்துடனும் இரண்டு இறக்கைகளுடன் சரபேஸ்வரராக தோன்றினார். கோபம் தணிய தன் இரு இறக்கைகளால் விசிறினார் சரபேஸ்வரர். கோபம் கொஞ்சம் தணிந்தது. ஆனால் நரசிம்மர் தன் உடலிலிருந்து கண்ட பேருண்டம் என்னும் பறவையை தோற்றுவித்தார். அப்போது சரபேஸ்வரரின் இறக்கைகளில் இருந்த பத்ரகாளி சிவனின் நெற்றிக் கண்ணின் உக்கிரத்தைத் தாங்கி உக்கிர பிரத்யங்கரா தேவியாக மாறி கண்ட பேருண்ட பஷியை ஜீரணம் செய்தாள். இப்போது சரபேஸ்வரர் தன் இறக்கைகளால் நரசிம்மரை அணைத்துக் கொள்ள நரசிம்மரின் கோபம் தணிந்தது.

          பிரத்யங்கரா தேவிக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகளும் மூன்று கண்களும், கனத்த சரீரமும், கரிய நிறமும் நீலநிற ஆடையையும் அணிந்து சிங்க முகத்துடன் இருப்பவள். கரங்களில் சூலம், கபாலம், பாசம், டமருகம் என்னும் நால்வகை ஆயுதங்கடன், சந்திரனை தலையிலும், வராஹத்தின் கொம்பும் ஆமையும் சேர்த்து கோர்க்கப்பட்ட மாலையும் அணிந்திருப்பவள். தனிமையில் இருந்து எள்ளும் புஷ்பமும் கொண்டு பூஜிப்பதால் ஆனந்தம் அடைவாள். பகைவர்களை நாசம் செய்வாள். பில்லி, சூன்யம், ஏவல் போன்ற மந்திர தந்திரங்களை தூள் தூளாக்குவாள்.

          அமாவாசை, பவுர்ணமியில் யாகம் வளர்த்து மூட்டை மூட்டையாக மிளகாய் போட்டு யாகம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் அடையலாம். கொஞ்சம் மிளகாய் முடிந்த அளவும் தரலாம். யாகத்தில் நெடியாக வராது. இது மக்க அதிசயமான யாகம்!

          பிரத்யங்கரா தேவியை வணங்கினால் நோயில்லாத வாழ்க்கையும் சகல ஐஸ்வர்யங்களையும் தருபவள்.

பார்வை நூல்

1. இந்திய நாட்டின் பண்டிகைகள், தேஜஸ்ஸ்ரீ, இந்திய நாட்டின் பண்டிகைகள், ஐந்திணை பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...