யுகாதி பண்டிகை
யுகாதி பண்டிகை என்பது ஆந்திர நாட்டில் கொண்டாடப்படும் வருடப்பிறப்பு விசேஷ நாளாகும். அன்று புதுயுகம் துவங்குவதால் யுகாதி பண்டிகை எனப் பெயர் வந்தது. அன்று எல்லோரும் புத்தாடை அணிந்து, தெய்வத்திற்குப் பலகாரங்கள் படைத்துக் கொண்டாடுவார்கள். மாமிச உணவும் அன்று விசேஷமாக செய்து சாப்பிடுவார்கள். தானங்கள் செய்வார்கள். கோயில் சென்று தெய்வத்தை வணங்கி வருடம் பூராவும் நன்றாக, செழிப்பாக இருக்க வேண்டிக் கொள்வார்கள்.
பார்வை நூல்
1. இந்திய நாட்டின் பண்டிகைகள், தேஜஸ்ஸ்ரீ, இந்திய நாட்டின் பண்டிகைகள், ஐந்திணை பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
Comments
Post a Comment