உருமு தனலெட்சுமி கல்லூரிக்குச் சென்ற அனுபவங்களாக...
இன்று (26.03.2025) திருச்சி, உருமு தனலெட்சுமி கல்லூரி, தமிழாய்வுத்துறையில் காலை 10.00 மணிக்கு செயற்கை நுண்ணறிவியலின் பயன்கள் (Artificial Intellegence in Tamil) என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. அதற்குச் சிறப்பு விருந்தினராக திரு. ஜெ. வீரநாதன் எம்.ஏ., எம்.ஏ., எம்ஃபில்., Director, Balaji insititute of Computer Graphics, Coimbatore-45 என்பவர் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிலரங்கம் நடத்தினார். அப்பயிலரங்கில் பி.லிட், எம்.ஏ முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். நானும் பயனடைந்தேன்.
செயற்கை நுண்ணறிவின் websites, அதைப் பயன்படுத்தி எவ்வாறு Picture Download பண்ணும் முறை, Key board Usage. Download பண்ணிய Picture பேச வைக்கும் முறை, பாடல் பாட வைக்கும் முறை என்று அனைத்தையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். எங்கள் கல்லூரி மாணவர்களுக்கும் பயலரங்கம் நடத்தித் தாருங்கள் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
அந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் இ.ஆர்.இரவிசந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். துறைத்தலைவர் (பொறுப்பு) முனைவர் என். விஜயசுந்தரி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் டி.இந்திரகுமாரி அவர்களுடன் நானும் சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன். காலை நிகழ்வுக்கு உதவிப் பேராசிரியர், முனைவர் ஆசிக் அகமது அவர்கள் நன்றியுரை வழங்கி சிறப்பு செய்தார்.
உருமு தனலெட்சுமி கல்லூரித் தமிழ்த்துறையில் பணியாற்றும்
அனைவரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள். செயற்கை நுண்ணறிவியல் பயிலரங்கில் கலந்து கொண்டு நானும் பயனடைந்தேன். அதற்கு தோழி உதவிப் பேராசிரியர் முனைவர் டி.இந்திரகுமாரி
அவர்களுக்கு மிகவும் நன்றிக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
மதியம் 2 மணியளவில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் சிறப்புரை ஆற்றினேன். என் உரையில் எனது வாழ்க்கைப் பயண அனுபவம், கணினி சார்ந்த என் அனுபவம், வலைதளம் உருவாக்கிய விதம் என்று மாணவர்களுக்குப் பயன்தரும் செய்திகளுடன் என் உரையை முடித்துக் கொண்டேன். அடுத்த நிகழ்வாக மாணவ, மாணவியர்களுக்குச் சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சி 3.30 மணிக்கு நிறைவடைந்தது. விழாவின் இறுதியாக உதவிப் பேராசிரியர் முனைவர் ஆர்.ஹேமலதா அவர்கள் நன்றியுரை வழங்கிச் சிறப்பு செய்தார்.
மாணவ, மாணவியர்கள், மற்றும் சக பேராசிரியர்கள் என அனைவரும் ஒன்றாக மதிய உணவு
சாப்பிட்டு, தேநீர் அருந்தி மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இன்றைய நாள் இனிதே
சென்றது.
Comments
Post a Comment