டால்ஸ்டாய்
எழுதிய கதை
மனிதனுக்கு
எவ்வளவு நிலம் வேண்டும்?
(How
much land does a man require?)
(பேராசை பெரு
நஷ்டம் என்பதற்கிணங்க இக்கதை அமைந்துள்ளது. மிகச் சிறந்த கதை)
பக்கோம் பேராசைக்காரன், ஒரு முறை நிலச் சொந்தக்காரனான
பாஷ்கீரைச் சந்தித்தான்.
”உங்கள் நிலத்திற்கு என்ன விலை?” என்று கேட்டான்.
”காலால் நடந்து ஒரு நாளில் எவ்வளவு நிலத்தைச்
சுற்றி வருகிறாயோ, அவ்வளவும் உன்னுடையதுதான்.”
பக்கோமுக்கு ஒரே மகிழ்ச்சி! கையிலிருந்ததை
முன் பணமாகக் கொடுத்து விட்டு ஓட ஆரம்பித்தான்.
காலையில் சூரியன் உதித்தவுடன் ஓட ஆரம்பித்தவன்
தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தான். நண்பகலுக்குப் பிறகு அவனால் ஓட முடியவில்லை. கால்கள்
வலித்தன.
சூரியன் அவனுக்காக காத்திருக்கவில்லை. அது
மேற்கு வானில் விரைவாக நகர்ந்து கொண்டே இருந்தது.
பக்கோமால் ஓட முடியவில்லை. உட்கார்ந்து தரையில்
தேய்த்துக் கொண்டே நகர்ந்தாள்.
கடைசி முறையாக சூரியனைப் பார்த்தான். அது
பெரியதாக சிவப்பாகத் தெரிந்தது.
பக்கோமால் நகரவும் முடியவில்லை. கீழே விழுந்து
விட்டான். வாயில் நுரை தள்ளியது. இரத்தமும் வழிந்தது.
கைகால்கள் துடித்து ஓய்ந்தன.
பக்கோம் உயிர் பிரிந்து விட்டது. பாஷ்கீரன்
அருகில் வந்தான்.
தன் வேலைக்காரனைக் கூப்பிட்டான். ஆறடி நீளமும்
மூன்று அடி அகலமுள்ள ஆழமான குழி தோண்டினான். பக்கோமை அதில் புதைத்தான்!.
பார்வை நூல்
1. தமிழ் வளர்த்த சான்றோர்கள், பிரேமா அரவிந்தன், பாக்கியம் பதிப்பகம், தஞ்சாவூர் - 613 001.
Comments
Post a Comment